பொன்னான பொழுதுகள்.....அப்ப தான் நாங்க 12வது படிச்சிட்டு இருந்த காலம்.... எங்க கிளாசு பசங்க நல்ல நாடகம் போடுவாக....சரி இதோட நம்ம பள்ளிக்கூட வாழ்க்க முடிஞ்சுருமே அதனால பொண்ணுகளையும் ஆட்டத்துக்கு சேத்துக்கலாம்னு முடிவு எடுத்து எங்களையும் கூப்புட்டாக.... நாங்களும் ஒரே பெரும தாங்காம போய் நின்னோம். நாடகம் எப்படினா சுதந்திரத்துக்கு முன்னாலயும் இப்பவும் இந்தியா எப்படி இருக்குன்னு நிழல்ல நடிச்சு காட்டனும்...ஒரு வெள்ள துணிக்கு பின்னால லைட்ட வச்சு வெளிச்சத்த குடுப்பாக.... லைட்டுக்கு முன்னால நின்னு நடிக்கும் போது அந்த பக்கம் நிழல் தெரியும்.... இத பசங்க செஞ்சு காட்டுனப்ப.... ஆ...னு வாய தொறந்து பாத்துட்டு இருந்தோம்(தேன்).... நம்ம கூட படிச்சவிங்க தானடா சாமி எப்படி தான் இப்படி எல்லாம் சிந்திக்கிறாகளோனு பெரும பிடிபடல.....

நம்மள நடிக்கச் சொன்னாகனா சும்மா கலக்கனும் டான்னு நின்னுட்டு இருந்தப்ப தான்... நம்ம டைரக்டர் பக்கத்துல வந்தாரு(பாலானு எங்க கிளாசுல ஒரு அறிவாளி-அட அவனுக்கு நெசம்மாவே அறிவு சாஸ்திபா)....நானும் என் சேக்காளியும் நின்னுட்டு இருந்தோம், "சுதந்திரத்துக்கு பின் பெண்கள் அனைத்து துறையிலும் முன்னேறி விட்டார்கள்னு" நாங்க சொல்லுவோம் நீங்க மருத்துவம், கலை, அரசியல் இப்படி ஒவ்வொரு துறைக்கும் ஒருத்தரோ அல்லது ரெண்டு பேரோ 2 நிமிஷம் நடிச்சிட்டு போய்றனும்னு சொன்னான். உடனே பொங்கி வந்த உற்சாகத்துல நமக்கு நெசம்மா டாக்டருக்கு கெடைகாதுடா சாமி இப்படி நடிச்சுகிட்டா தான்னு என் சேக்காளிகிட்ட சொன்னேன்.... அவ பெரிய மனசுக்காரி.... சரி நீ டாக்டரா நடி... நான் பேஷன்ட்டா நடிக்கிறேன்னு ஒத்துகிட்டா(இதுல பாத்துகிட்டீங்கன்னா நாங்க ரெண்டு பேருமெ செம சைசு... யாரு டாக்டர் யாரு பேஷன்ட்டுனு தெரியாத அளவுக்கு).

எனக்கு குடுத்த ஸீன் என்னனா.... அட ஒண்ணுமெ இல்லப்பா பேஷன்ட்டு கையுல பல்சு பாக்கனும், அப்பறம் அது என்ன கோப்பு அதான் அந்த ஸ்டெத்தஸ்கோப்ப அவ மேல வச்சு பாக்கனும்... இவ்வளவு தான்யா....ஆனா நான் என்ன பண்ணினேன் தெரியுமா.....

பெரிய பெரிய ஸீன நடிக்கிறவங்க எல்லாம் பின்னி எடுத்தாக.... நம்ம ரிகர்ஸல பாக்க ப்ரின்சிபால், அப்புறம் தமிழ், கணக்கு வாத்தியாருக எல்லாம் வந்துருக்காக.... மறுநாள் கலெக்டரு வராரு ஆண்டு விழாக்கு .... நாங்க வர வேண்டிய ஸீனும் வந்தது, அப்ப தான் எனக்கு திடீர்னு ஒரு பயம் வந்துருச்சு... லைட்ட எங்க மேல போட்ட உடனே நான் அவசரமா ஸ்டெத்தஸ்கோப்ப பேஷன்ட்டு காதுல வச்சுட்டேன்யா..... அவ்வளவு நேரம் அமைதியா பாத்துட்டு இருந்தவக எல்லாரும் கொல்லுனு சிரிச்சாகளெ பாக்கனும்..... எனக்கு நான் என்ன பண்ணியிருக்கேனே தெரியாம முழி முழினு முழிச்சிட்டு நிக்கேன். அப்புறம் மொத்த கிளாசும் ஒழுங்கா நடி தாயேனு என் கால்ல விழுந்தது வேற கதை. இப்படி நிறைய நடந்து போச்சு......எப்ப நினைச்சாலும் சிரிக்கிற விஷயமா இருக்கும் இது.

1 comments:

Anand R said...

Thavaru seivadhai vida adhai palar maththiyil otrukkollavey periya manasu vendum. nee... periya manasukkaarigalukkellaam thalaiviyaai, un thavarai neeye suttikkaattiyirukkiraai.
Vaazhthukkal...
Posting romba pramaadhamaa vandhirukku.