தரையில் இறங்கும் விமானங்கள்



ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்த இளைஞனின் மனநிலையை சொல்லி செல்லும் எதார்த்தமான படைப்பு இது. என்னுடைய 11ஆம் வகுப்பில் இந்த நாவலை வாசிக்க நேர்ந்த போது நிச்சயமாய் நான் எதிர்பார்க்கவில்லை இது என்னுள் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று. கதை நாயகன் விஸ்வத்தின் இடத்தில் என்னை பொறுத்தி பார்த்து அனந்த்ப் பட்டதுண்டு. விஸ்வத்தின் வீட்டில், அண்ணன் பரசு, அண்ணி ருக்மணி, அப்பா, ஒரு தம்பி மற்றும் தங்கை இருக்கின்றனர். இவர்களில் ஒவ்வொருவர் மேலும் விஸ்வத்தின் பார்வை எப்படி படிகிறது என்பதையே ஆரம்ப அத்யாயங்களில் நாம் பார்க்கிறோம். விஸ்வம் ஒரு இலக்கிய ரசனை மிகுந்த, சராசரி வேலைகளில் தன்னை தொலைத்துக் கொள்ள விரும்பாத இளைஞனாகவே வருகிறான்.

விஸ்வத்தின் கலாரசனைகளில் முக்கியமாய் நம்மை ஈர்க்கும் சில விஷயங்கள்: காரைப்பெயர்ந்த சுவர்களில் அவன் கண்களுக்கு
தெரியும் நடன மங்கை, இரவில் லாந்தர் விளக்குடன் வரும் கூரை வேய்ந்த மாட்டு வண்டிகள், ஒரு வெயில் நாளின் மதிய பொழுதுகள் இப்படி நிறைய தருணங்கள் கவிதையாய் விவரிக்க படுகிறது. இரவில் நண்பனுடன் மாலியின் இசையில் கரைந்து மௌனமாய் வீடு வருவது, நண்பர்களுடன் குட்டிச் சுவரில் அமர்ந்து இலக்கிய சர்சையில் ஈடுபடுவது எல்லாம் விஸ்வத்தின் மனப்போக்கை நமக்கு விவரிக்கிறது. தனக்கு கொஞ்சமும் பிடிக்காத வேலைக்கு சிபாரிசுக் கடிதத்துடன் காத்திருக்கும் விஸ்வத்திலிருந்து கதை நகர்கிறது.

விஸ்வத்தின் குடும்பத்தை தாங்கும் அண்ணன் பரசுவின் தியாகங்களை நினைத்து விஸ்வம் வருந்துகிறான், அவனுக்கு பரசுவின் தியாக உள்ளம் சில நேரங்களில் எரிச்சலை கூட எற்படுத்துகிறது. பரசுவின் ஆசைகள் நொருங்கி போன தருணங்களை ட்யிப் அடிக்க பேப்பருடன் கிளம்பும் பெண்ணுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கும் பரசுவின் மனதில் எற்படும் வலி நமக்குள்ளும் ஏற்படுகிறது.

பரசு மணந்துக்கொள்ளும் ருக்மணியை பார்த்து விஸ்வம் அதிர்ச்சி அடைகிறான், இவ்வளவு அழகான பெண் பரசுவுக்கு சரிவருமா என்று ஆதங்க படுகிறான். எனினும் ருக்மணி இந்த கதை நம்முள் இட்டுச் செல்லும் கோலங்களுக்கு அழகான வண்ணம் தீட்டுகிறாள். அவளுக்கும் விஸ்வதிற்கும் இடையே உள்ள நட்பு அழகாய் விரிகிறது, தன்னுடைய அம்மா இட்டுச் சென்ற இடத்தை ருக்மணி எழிதாய் நிரப்பியதாய் நினைகிறான். ருகம்ணியின் இலக்கிய ரசனை, வீணை வாசிப்பு எல்லாம் விஸ்வத்தை இன்னும் சந்தோஷப்படுத்துகிறது, எனினும் ருக்மணியும் பரசுவும் சந்தோஷமாய் இல்லை என்ற என்னமே அவனை வருத்துகிறது.

ஜமுனா, விஸ்வம் காதலிக்கும் பெண், அவனை எதார்த்தமாக சிந்திக்க வைக்க விரும்பும் காதலி. இதனாலேயே இவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் வெகு குறைவாகவே இருக்கிறது. பரசுவிற்கு திடீர் என்று வேலை மாற்றல் கிடைக்கிறது சென்னையை விட்டு வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயம் எற்படுகிறது, ஊர் கிளம்பி செல்லும் முன் பரசு விஸ்வதிடம் பேசுகிறன், அது ஒரு அழகான உரையாடல். விஸ்வதிடம் பரசு, அப்பா மற்றும் ருக்மணி தனியாய் பேசும் தருணங்கள் அற்புதமாய் வடிக்கப் பட்டிருக்கிறது. கடைசியில் தன் இலக்கிய இதழை விட்டுவிட்டு விஸ்வம் வேலைக்கு செல்கிறான். எதார்த்த வாழ்க்கையின் சிக்கல்களை புரிந்து கொள்ள சில நேரங்களில் அதிக அவஹாசம் தேவைப் படுகிறது, அதுவே தரை இறங்க விமாணம் எடுத்த் கொள்ளும் நேரம் போன்றது என்று அற்புதமாய் புரிய வைத்திருக்கும் இந்துமதியின் இந்த கதை என்னுள் என்றும் பசுமையாய் இருக்கும்.

5 comments:

KARTHIK said...

// இந்துமதியின் இந்த கதை என்னுள் என்றும் பசுமையாய் இருக்கும்.//

நடக்கும் புத்தாண்டுல முதல் பதிவே புத்தக வாசத்தோட தொடங்கிருக்கீங்க நல்ல தொடக்கம்.

நல்ல விமர்சனங்க.

இனியாள் said...

Varugaiku nandri karthick. Ini thodarnthu niraiya elutha muyarchikiren.

selva ganapathy said...

migundha azhagu!!!!

Anand R said...

நீ படித்த அதே புத்தகத்தை, நீ படித்த அதே வயதில் நானும் படித்திருக்கிறேன். (அதே புத்தகம்தான் - பிரசன்னா தந்ததாக நினைவு). நான் மிகவும் ரசித்த புத்தகம் அது. அதனை மீண்டும் என் நினைவிற்கு கொண்டுவந்ததற்கு நன்றி.

இனியாள் said...

Selvavirkum ananthirkum mikka nandri, en thozhi endru anega idangalil nan kuripiduvathu prasannavai thaan.