அடை மழைக்கு மறுநாள் இலைநுனியில் தங்கியிருக்கும் பனித்துளியைப் போல குளுமையும் இனிமையும் நிறைந்த நாட்கள் அவை.அப்போது நான் பள்ளி என்னும் கூட்டிலிருந்து கல்லூரி வானில் பறக்கக் காத்திருந்தேன். என் வாசிப்பு மெருகேறியது அந்த நாட்களில் தான்.
எனது 8ஆம் வகுப்பிலேயே நான் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். என் பெற்றோர் எனக்கு "பொன்னியின் செல்வனையும், சிவகாமியின் சபதத்தையும்" அறிமுகப்படுத்தி இருந்தார்கள். எங்கள் வீட்டு மாடியில் இருந்த புத்தக அலமாறியே என் பிரியத்திற்குரிய இடமாகிப்போனது.12ஆம் வகுப்பில் தான் எனக்கு முதல் முதலில் நூலகத்தில் ஆர்வம் வந்தது.
பைன்ட் செய்யப்பட்ட பழைய புத்தகங்களின் வாசம் என்னுள் பெரிய சிலிர்ப்பை எற்படுத்தும். நா.பார்த்தசாரதி, தி.ஜானகிராமன், பாலகுமாரன், லா.சா.ராமாமிர்தம், சாண்டில்யன், கல்கி,மூ.வ இப்படி பலரை நான் அறிந்து கொண்டது ஊர் நூலகத்திலே தான். அப்பா சில ஆங்கிலப்புத்தகங்களையும் அம்மா சில பெண் எழுத்தாளர்களின் புத்தகங்களையும் வாசிக்க தூண்டினார்கள்.
என் பள்ளி நாட்களில் எனக்கு கவிதை என்றாலே அது வைரமுத்து எழுதுவது தான் என்று ஒரு எண்ணம் இருந்தது, பள்ளி நண்பனின் அறிமுகத்தில் கையில் கிடைத்தது கணையாழி. 4 கணையாழியை முழுதாய் முடித்தும் ஒன்றுமே புரியாத நிலை. மெல்ல மெல்ல புரியத்தொடங்கிய போது வாசிக்க கூட நிறைய கற்று கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டோம் நானும் என் தோழியும்.
நாம் வாசிப்பையும் புரிதலையும் பகிர்ந்து கொள்ளாமலே தொடர்ந்து வாசிக்க முடியாது என்றே எனக்குத் தோன்றும். அப்ப்டி பகிர்ந்து கொள்ள எனக்கு அற்புதமாய் ஒரு தோழி இருந்தாள். தாமிரபரணியின் படித்துறையில் துணிச்சோப்பின் வாசத்தோடு, கனுக்கால் நனைய வாசிப்பை பற்றி பேசுவது ஒரு அலாதியான அனுபவம் தான். எங்கோ அக்கரையில் கேட்கும் வார்த்தைகள் அற்ற இசையின் இனிமையோடு நதியின் சலசலப்பில் மிதந்துக்கொன்டிருப்பர்கள் மனுஷ்யபுத்திரனும், ப்ரமிளும், தாமரையும்.
மஹாஸ்வேதாதேவியின் "காட்டின் உரிமை", மெக்ஸிம் கார்கியின் "தாய்", எஸ்.ராமகிருஷ்ணனின் பல புத்தகங்களை எங்கள் ஊர் நூலகத்தில் பார்க்க நேர்ந்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு ஓர் எல்லை இல்லை. இந்த நகர வாழ்வில் ஆயிரம் நூல் நிலையங்கள் வரலாம் எனினும் எங்கள் ஊர் நூலகத்தின் வாசீகரம் அவற்றில் இல்லை என்றே எங்களுக்குத் தோன்றும்.
8 comments:
// என் பள்ளி நாட்களில் எனக்கு கவிதை என்றாலே அது வைரமுத்து எழுதுவது தான் என்று ஒரு எண்ணம் இருந்தது, //
எனக்கு கவிதைல விருப்பம் இல்லைங்க.
ஆனா பலபேர் உங்கள மாதிரி தான் ஆரம்பத்துல வைரமுத்தோட நின்னுருக்காங்க.
நல்ல வாசிப்பனுபந்தாங்க.அதுலையும் எஸ்ரா எல்லாத்தரப்பையும் திருப்திபடுத்துரவரு எனக்கு ரொம்ப புடிச்ச எழுத்தாளர்.
romba romba azhaga ezhudareenga.. i need to follow ur blog more regularly..
taamiraparani yaiym, namma oor library yum gnabaga paduthi , ennai romba azhagana andha naatkalukku kondu poitteenga..
yaerkanavae namma oorai romba miss panraen, idhula unga blog ai vera padichu, innum 10 nalukku orae nostalgia dhaan..
Nandri karthick, thodarnthu vanthu ennaiya santhosha paduthureenga. Enakkum S.Ra na romba pidikkum.
Nandri shankar, namma oora marakka mudiyuma...... thamirabaraniyin salasalppil, podhigaiyin ezhutchiyil ellam thaan namakku kavithaigal kidaikindrana. Varugaiku nandri, adikadi vaarungal.
//அப்பா சில ஆங்கிலப்புத்தகங்களையும் அம்மா சில பெண் எழுத்தாளர்களின் புத்தகங்களையும் வாசிக்க தூண்டினார்கள்//
//பள்ளி நண்பனின் அறிமுகத்தில் கையில் கிடைத்தது கணையாழி//
//அப்ப்டி பகிர்ந்து கொள்ள எனக்கு அற்புதமாய் ஒரு தோழி இருந்தாள்//
சுடர்விலக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்னு சும்மாவா சொனாங்க.
உங்க வாசிப்பு அனுபவத்தை படிக்கும்போது நானும் என்னோட பள்ளிகூட நாட்களுக்கு போயிட்டேன். உருப்படியா ஒன்னுமே பண்ணலியே என்ற ஏக்கம்தான் மிஞ்சியது. அதே சமயம் இனிமேலாவது நிறைய படிக்க வேண்டும் என்ற விதையை என்னுள் ஊன்றியது என்னவோ உண்மை..
வாழ்த்துகள் இனியள்
கப்பியாம்புலியுரன்
Nandri kandavelan, neenga ippo peria vaasagana ahiteenga inime neenga elutha arambikalam.
மிக அழகா எழுதன பதிவு... வாழ்த்துக்கள்...
வாசிப்பு அனுபவம் குறித்த பகிர்தலோடு, உங்கள் ஊர் நூலகம் மீதான ப்ரியம் வியக்க வைக்கிறது. வாருங்கள்... என் தளத்திற்கு
Post a Comment