நதியே நதியே காதல் நதியே....


பட்டாம்பூச்சிகளையும் தும்பிகளையும் எனக்கு அறிமுக படுத்தியதே அந்த ஆத்து சாலை தான். இருபுறங்களிலும் மரங்களும் வயல்களும் பசுமையை நிறைத்திருக்க நடுவே உள்ள சாலை வழி நாங்கள் ஆற்றங்கரைக்கு போவோம். மலை இறங்கியதும் அவளை அன்புடன் அழைத்ததால் அம்பாசமுத்திரத்தில் ஆசையுடன் படர்ந்திருந்தாள் தாமிரபரணி.

ஞாயிறுகளை ஆசையாய் எதிர்பார்ப்பதே ஆற்றில் குளிக்கலாம் என்பதற்காக தான். இவ்வளவு ஆசை படுவதால் நீந்த தெரிந்திருக்குமா என்றால் இல்லை, அங்கே சென்று அந்த படித்துறைகளி
ல் அமர்ந்து கொண்டு வாளியில் கோரி கோரி குளிபதற்கே அவ்வளவு பரவசம். அப்போதெல்லாம் அம்மாவோ பாட்டியோ குளிப்பதை பார்த்தாலே மகிழ்ச்சி தண்ணீரில் முங்கி சில மணித்துளிகள் அப்படியே இருந்து இலக்கான கன்னுகுட்டி பாறை(கன்னுக்குட்டியின் முதுகு புறம் போல அமைத்திருக்கும்) அருகில் போய் எழுந்து வரும் போது அவர்கள் கண்ணில் தெரியும் ஆனந்தம் விவரிக்க இயலாதது, அதை பார்க்கும் எனக்கும் அப்படி குளிக்க ஆசை வரும் எனினும் அடி வயிற்றில் ஒரு பயம் இருக்கும் அந்த சின்ன வயதில்.

அம்மா ஒரு மூட்டை துணிகளை துவைத்து முடிக்கும் வரை சிறு மீன்கள் கால்களில் விளையாடிகொண்டிருக்க அந்த மஞ்சள் துணி சோப்பின் மனம் நிறைந்திருக்கும் படித்துறைகளில் ஈர சேலையில் குளித்து கொண்டிருக்கும் அக்காகளையும் அவர்களை ரகசியமாய் ரசித்து கொண்டிருக்கும் அண்ணன்களையும் பார்த்தபடி அமர்ந்திருப்பேன். அந்த சொரசொரப்பான படித்துறைகளில் மஞ்சளை உரசி தேய்த்தபடி மறுபடியும் முங்கு போட கிளம்புவாள் பாட்டி.

இப்படி குளிக்க போகும் தருணங்களில் என்றாவது ஆற்றின் மேல் உள்ள தண்டவாளங்களில் ரயில் போனால் அன்று குதி ஆட்டம் தான். தூரத்தில் பச்சை மரங்கள் மிதக்கும் ஆத்திற்கும் வானத்திற்கும் நடுவே வேகமாய் போகும் அந்த ரயிலோடு பறக்கும் மனதும். வெளி ஊருக்கு படிக்க போன நாட்களில் ஊரும் ஆறும் அந்த ஆத்து சாலையும் பொக்கிஷங்களாய் தெரிய தொடங்கிய போது, ஆச்சி அழைப்பதாய் கனவு வரும். 'எடி ஆத்துக்கு குளிக்க வாரியா கன்னுகுட்டி பாறை முங்கி தண்ணி போகுதாம்' என்று நிஜத்தில் அழைப்பதை போலவே இருக்கும். இதென்ன அம்மாவும் அப்பாவும் தராத எந்த சந்தோஷத்தை இந்த நதி தந்திருக்கும் என்று வியப்பு வரும்.

மாலை வேளைகளில் தோழியுடன் ஆத்து சாலையின் அந்த மென் காற்றில் நடந்து போய் படித்துறைகளில் அமர்ந்து அக்கரையில் கேட்கும் வார்த்தைகளற்ற அந்த இசையை கேட்க்கும் போது மனசு நிறைந்து வழியும். பசும் பட்டாடை விரிந்திருக்கும் அந்த வயல்களில் நடுவே போகும் வரப்பு தண்ணீரில் விளையாடிய போது மனம் குழந்தையாகும்.

பின்நாளில் என்னவனை பற்றிய என் கனவுகளில் எல்லாம் நான் அந்த நாயகனுடன் ஆத்து சாலையில் தான் கரம் கோர்த்து நடந்திருந்தேன். அதே ஆத்து சாலையில் என்னவருடன் நடந்த போது என் கனவு மெய் பட்டதில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன். இன்று நகரத்தில் உலவி திரிவது என் கால்கள் மட்டுமே, மனம் என்னவோ தாமிரபரணி படித்துறைகளில் தான் மூழ்கி திழைகிறது.
பி. கு : இந்த படங்கள் அனைத்தும் அம்பாசமுத்திரத்தில் பிறந்து வளர்ந்த ஷங்கரின் கைவண்ணங்கள். நன்றி ஷங்கர்.

15 comments:

Raja said...

அருமையான புகைப்படங்கள் தோழி. உங்க பதிவை படிச்சதும் ஊருக்கு போகணும் போல இருக்கு.

நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கு படர்ந்திருந்தால் = படர்ந்திருந்தாள்; ஆசையை = ஆசையாய் ; பட்டடை = பட்டாடை ; திழைகிறது = திளைக்கிறது. தவிர்க்கவும்!!

அம்பையின் அக்மார்க் ஆற்று சாலை, இருபுறமும் மரங்கள். அருமையான புகைப்படம்.

கடைசியில் ரொமான்ஸ் சூப்பர்!!

அண்ணாமலையான் said...

என்னா ஒரு பெருந்தன்மை..?! ரகசியமா ரசிக்கும் அண்னன்கள்னு சொல்லிருக்கீங்க?!!

புலவன் புலிகேசி said...

அனுபவங்களின் விவரிப்பு நன்றாக உள்ளது..

இனியாள் said...

நன்றி ராசா வருகைக்கும் கருத்துகளுக்கும். கண்டிப்பாக எழுத்து பிழைகளை திருத்தி விடுகிறேன்.

இனியாள் said...

அண்ணாமலையான் வாங்க ரகசியமா தான் ரசிச்சாகனும் இல்லாட்டி ஒதை விழாதா என்ன ?

இனியாள் said...

நன்றி புலிகேசி.

S Maharajan said...

"ஞாயிறுகளை ஆசையாய் எதிர்பார்ப்பதே ஆற்றில் குளிக்கலாம் என்பதற்காக தான்"

நினைவுகளை ஊரு பக்கம் திருபுடீங்க! மக்கா

சங்கர் said...

வழக்கம் போல அசத்தல், இந்துமதி ... என்றும் மறக்க இயலா ஒரு அற்புதமான நினைவு - பரணியில் நீராடிய அந்த கணங்கள்..

ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க .... வழக்கம் போல் தங்கள் தமிழுக்கு பணிகிறேன்.

PS: By the way, என்னுடைய இரண்டு புகைப்படங்கள் நீங்கள் இங்கே உபயோகித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.. அதே சமயம் அந்த புகைப்படங்களுக்கு கீழே அதன் source ai mention செய்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்து இருக்கும்..

தங்கள் எழுத்துக்கள் தொடரட்டும்

இனியாள் said...

வருகைக்கும் இடுகைக்கும் நன்றி ஷங்கர், பின்குறிப்பு சேர்த்து கொள்ள பட்டது இப்பொழுது மகிழ்ச்சியா....

Sakthi said...

man vaasanai

SANKAR SALVADY said...

இந்துமதி: நீங்க என்னோட blog- இல் விட்டு இருந்த comment- ஐ சமீபத்தில் தான் பார்த்தேன்.. அங்கு நீங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள், என்னுடைய படங்களை உபயோகிப்பதை பற்றி.. அதை முதலில் பார்க்காது குறித்து, sorry :)

என்னுடைய படங்கள் தங்கள் blogai அழகூட்டுவதில் மிக்க மகிழ்ச்சி ..

இனியாள் said...

Nandri maharajanukum sakthikum.

Anand R said...

அம்பைக்கு செல்லும் ஆவலைத் தூண்டிவிட்டுவிட்டாய்... நன்றி...

இனியாள் said...

அம்பை ஒரு அற்புதமான ஊர் இல்லையா அதில் தான் நம் வேர்கள் இருந்தது என்பதே பெருமைக்குரிய விஷயம் தானே ஆனந்த்.

அன்புடன் அருணா said...

நலலா ஓடுது காதல் நதி!