கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி.....



அது ஒரு அற்புதமான உணர்வு காதலுக்கு முன்னும் , ட்பிற்கு அடுத்த நிலையிலுமான அந்த காலம் சுவாரஸ்யங்கள் நிறைந்தது. அப்படி பல சுவாரஸ்யங்களுக்கு சொந்தகாரர்களாய் இருந்து அதை அனுபவித்த கவின்மொழியும் சூர்யாவும் வெகுஇயல்பாய் அந்த பூக்கள் உதிர்ந்த சாலையில் நடந்துகொண்டிருந்தார்கள்.

சூர்யா, பேச்சில் நேர்மையும் பார்வையில் நிமிர்வும் நேசத்தில் மென்மையும் காட்ட தெரிந்த ஒரு எதார்த்தவாதி.
பாரதியின் ரௌத்ரம் பழகு இவனுக்கும் கொஞ்சம் பழகி இருந்தது. சில முகங்களுக்கு புன்னகை ஒரு உறுபாய் பொருந்தி இருப்பது போல சூர்யா சிரித்த முகம் உடையவன் அல்ல, ஆனால் சட்டேன்று சிரித்தால் பூவின் மலர்வை போல முகம் விகசித்து கன்னம் குழியபரவும் அந்த சிரிப்பில் நட்பின் கரங்கள் நிறைந்திருக்கும்.

கவின் மொழி,
னே பெண்களை போல மழையையும் மண்ணையும் நேசிக்கும் ஒரு தீராகாதலி. மார்கழி கோலம் போல குளுமையானது அவள் மனசு. கவன குறைவுகளும் அதற்கானபிரியமானவர்களிடம் செல்ல சண்டையுமாய் எளிமையாய் நட்பில் இளைய தெரியும் கவினுக்கு.

கவினும் சூர்
யாவும் அழகான மாலை பொழுதில்அந்த சாலையில் நடந்து போன போது கவின் தன் அம்மா தனக்கு மனம் செய்ய விரும்புவதை சொன்னாள். அதை கேட்டு விட்டு சூர்யா உனக்குஒரு போங்கு மாப்பிள்ளை தான் கிடைப்பான் என்று சொல்லி சிரித்தான். கவினும் சிரித்தாள் தான் சூர்யாவிடம் என்ன எதிர் பார்க்கிறோம் என்று சொல்ல தெரியவில்லை அவளுக்கு.

அன்று கவினை பெண் பார்க்க வந்திருந்தார்கள் அவளுக்கு இந்த சடங்குகள் மேல் ஆத்திரமும் எரிச்சலும் ஏற்பட்டது , மாப்பிள்ளை இவளி
டம் தனியாய் பேசிய போது இவர் எனகானவர் என்று அவளுக்கு தோன்றவே இல்லை, கவினுக்கு அப்பா இல்லை. அவளின் அம்மா முதலிலேயே நீ யாரையும் நேசிகிறாயா என்று கேட்டு விட்டுதான் இந்த ஏற்பாட்டை செய்திருந்தார்கள், அவர்கள் அப்படி கேட்ட போது கவினும் தன்னைகேட்டு கொண்டாள் என்னுள் காதல் இருக்கிறதா என்று, இல்லை என்று தெளிவாய் பதில்சொல்லி விட்ட இதழ்களை பரிகாசம் செய்தது அவள் இதயம்.அவள் அம்மாவை உறவினர்கள் சேர்ந்து சமாதான படுத்தி அந்த மாப்பிள்ளையையே நிச்சயிக்க முடிவு செய்தனர்.

கவி சூர்யாவிடம் எனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்
கவே இல்லை என்று சொன்ன போது, சூர்யாவிற்கு அப்போதும் சிரிப்பு தான் வந்தது உனக்கு ஏத்த போங்கன் தான் கிடைத்திருக்கிறான் என்று சொல்லி சிரித்தான். எனினும் மனதின் மூலையில் இனி கவினிடம் பேச முடியாது, ஆவலுடன் மரங்கள் அடர்ந்த அந்த சாலையில் நடக்க முடியாது , நள்ளிரவு வரை நீளும் அர்த்தமற்ற குறுஞ்செய்திகளை தொடரமுடியாது, எல்லாவற்றையும் விட அவளை இன்னொரு ஆணின் அருகில் வைத்து பார்க்கமுடியவில்லை அவனால். நாளைக்கு HCL walkin இருக்கே ஒழுங்கா வந்து சேரு என்று அலைபேசியில் சொல்லி விட்டு வைத்துவிட்டான் சூர்யா.

கவினுக்குளும் அந்த தவிப்பு இருந்தது சூர்யாவிடம் நாம் என்ன தான் எதிர்பார்க்கிறோம், எதற்காய் நமக்கு அந்த மாப்பிள்
ளையை பிடிக்கவில்லை என்றெல்லாம் எண்ணி குழம்பினாள். மறுநாள் சூர்யா வரும் முன்பே அவள் நேர்முக தேர்விற்கு சென்று விட்டதால் சில சுற்றுகள் அவளுக்கு முடிந்திருந்தது, அவள் அலைபேசியில் சூர்யாவின் குறுஞ்செய்தி எங்கே இருக்கிறாய் என்று வந்திருந்தது.

உடனே சூர்யாவை தேடி போன போது சூர்யாவின் பார்வையில் ஒரு மாற்றத்தை பார்க்க முடிந்தது அவளால் . அப்பறம் என்ன சொல்றான் அந்த
போங்கன் என்று தான் சூர்யா பேச்சை தொடங்கினான் கவினுக்குள் ஆத்திரம் எழுந்தது அவள் முறைக்க தொடங்கும் போதே அவன கல்யாணம் கட்டிகிறத்துக்கு என்னையே கட்டிக்கலாம் என்று சிரித்து கொண்டே சொன்னான். அதே சிரிப்பு கன்னம் குழிய பார்பவரையும் அழைக்கும் அந்த சிரிப்பு. கவின் சட்டென்று சிரித்து விட்டாள். உனக்கு எப்பவுமே விளையாட்டு தானா என்று கேட்ட போது அவள் குரல்மிக மென்மையாகி இருந்தது.


ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை சிரித்து கொண்டே சந்தோஷமாதானே சொல்
முடியும், சொல்லு என்னை கல்யாணம் கட்டிக்க சம்மதமா என்று சூர்யா கேட்டபோது, கவினின் கண்களில் வெட்கம் ஆட்கொண்டிருந்தது ,சூர்யாவின் பார்வையிலேயே அவள் அலங்கரிக்க பட்டாள். அந்த அற்புத நொடியில் அவர்களை தவிர வேறு யாருமே இல்லாத உணர்வு, உலகமே சூர்யா மயமாகி போனது போல அவள் கண்கள் முழுவதும் நிறைந்து வழிந்திருந்தது களிப்பு. இதை போன்ற அற்புத நொடி இனி கிடைக்க போவதில்லை என்று கவினுக்கு தோன்றியது, அந்த மகிழ்வை முழுமையாகக அந்த நொடியிலேயே அவளும் சரி என்றாள், அவளால் வேறு எந்த பதிலையும் சொல்ல முடியாதென்று சூர்யாவிற்கு என்ன தெரியாதா.....

9 comments:

Unknown said...

Very nice love story!!!!

எல் கே said...

ithellam over takkunu kathaya mudinga

S Maharajan said...

பின்னூட்டம் போட்டாச்சு,
வோட்டு போட்டாச்சு
எப்போ அடுத்த பதிவு எழுதுவிங்க!
நல்ல கதை அருமையாக இருக்கிறது

SANKAR SALVADY said...

யாரு இந்து சூர்யா, கவின் ? :)

இயல்பான, complications இல்லாத காதல் :) ...சில வார்த்தைகள் எனக்கு புரிய வில்லை,ஒரு இடத்தில் "மணம்" தவறாக "மனம்" என்று இருந்தது..

மற்றபடி simple and nice :)

இனியாள் said...

thanks sri and LK i am not extending the story,its just for creating an interest.

இனியாள் said...

நன்றி மகாராஜன் கண்டிப்பாக எழுதுகிறேன்.

இனியாள் said...

யாராக இருக்கும் ஷங்கர், நிஜ வாழ்க்கையில் அதிகம் கஷ்ட படாமல் எதார்த்தமாய் முடிய கூடிய காதல் கதைகளும் எவ்வளவோ இருக்கிறதே. உங்களுக்கு புரியாத சில வார்த்தைகளை என்னிடம் கேட்கலாமே.பகிர்விற்கு நன்றி.

ரோஸ்விக் said...

கவிதையாய் தலைப்பும்... காதலாய் எழுத்தும்... அருமை... வாழ்த்துகள்.

Vijay Anand said...

hi

The story is really nice ... Narration is good. Keep blogging ..

Vijay anand.
iSOFT.