வாசிப்பின் மனவெளி -2


வாசிப்பில் காதலையும், ரசனைகளையும் மட்டுமே கண்டு வந்த என்னை ரத்தம், வேர்வை, கண்ணீர், உழைப்பு எல்லாவற்றையும் பற்றி சிந்திக்க வைத்த புத்தகம் 'தாய்'. உலகிலேயே திகமா மொழிகளில் மொழிபெயர்க்க பட்ட புத்தகம் தாய் என்று ஒரு நண்பர் சொன்னதை நினைவு. ரஷ்ய நாவலான் தாய்(மக்ஸ்சிம் கார்கி), என் ண்பர்கள் பலவாறு என்னை ஊக்க படுத்தி எங்கள் ஊர் நூலகத்திலே அது கிடைத்த போது எனக்கு மகிழ்ச்சியில் குதித்து விடலாம் போல இருந்தது, அதில் என்ன இருந்தது என்பதை விட இதை நாம் படிக்க போகிறோம் என்பதே சிலிர்பை இருந்தது. அதிலும் அது ஒரு கம்முனிச நாவல் என்று முன்பே அறிந்து வைத்திருந்ததால் நான் என்னவோ பெரிய லெனினின் தங்கை போல ஒரு உணர்வு கிளர்ந்தது(இவ்வளவும் அந்த புத்தகத்தை படிக்கும் முன் இருந்த உணர்வு).படிக்க தொடங்கிய போது, ஒரு நாயகன் நாயகி என்று(தமிழ் சினிமா போல) தொடங்காமல் தொழில்சாலை தொழிலாளர்கள் என்று இருந்தது முதலில் பெரிய ஏமாற்றமாய் தான் இருந்தது னால் தொடர்ந்து படித்த போது தான் அந்த தொழிலாளிகளின் வேதனையும் வலியும் மெல்ல மெல்ல தாக் தொடங்கியது. நாயகன் பாவேலின் தாயின் அற்புதமான தியாகம் மெய் சிலிர்க்க வைத்தது, மெல்லிய சரடாய் வரும் காதல் பெரிய விஷயமாய் தெரியவே இல்லை. என் வாசிப்பின் மற்றொரு பூங்கதவு தாழ்திறந்து கொண்டது, ஒரு புறம் பசி பட்டினி என்ற பல முகங்கள் பற்றி தெரிய நேர்ந்தாலும் மறுபுறம் திறந்த வானமும் எனக்கு கிடைத்த் வாழ்கையும் எவ்வளவு நிம்மதியானது என்பதை உணர்த்து வாழ கற்று தந்தன இந்த நூல்கள்.

கையில் கிடைத்தவற்றை ல்லாம் படிக்க தொடங்கிய போது வங்காள எழுத்தாளர் மஹா ஸ்வேதா தேவியின் 'காட்டில் உரிமை' கையில் கிடைத்தது,அந்த அற்புதமான புதினத்தின் சிறப்பு எனக்கு தெரிந்திருக்கவில்லை,
பின்னாளில் தான் ஸ்வேதா தேவி வங்காளத்தில் மிக பெரிய புரட்சி எழுத்தாளர் என்பதே எனக்கு தெரிய நேர்ந்தது, அவரின் இந்த நூலை பற்றிய குறிப்புகளை இணையத்தில் இன்றும் கூட நான் அதிகம் பார்த்தது இல்லை(தமிழ் மொழிபெயர்ப்பை பற்றி), எனினும் அற்புதமான நூல் இது. சுதந்திரத்திற்காக போராடிய நகர வாசிகளை பற்றி மட்டுமே அறிந்திருக்கும் மக்கு அந்த நாட்களில் காட்டில் வாசித்த ஆதி வாசிகளின் நிலை பற்றி பெரிய கருத்துக்கள் இல்லை, ஆனால் அந்த புத்தகம் வாசித்த போது மிகபெரி அதிர்ச்சியாய் இருந்தது, ஆதி வாசிகள் எவ்வளவு துன்புறுத்த பட்டிருக்கிறார்கள் என்றும் அரிசி சோற்றுக்கே அவர்கள் மதம் மாற வேண்டி இருந்த அவல நிலை பற்றியும் வாசிக்க நேர்ந்தது அதில் வரும் சம்பவங்கள் எதுவுமே புனைவில்லை அவ்வளவும் நிஜம், அதை படித்து விட்டு பல இரவுகள் அழுதிருக்கிறேன். அதே போல '1084 லின் அம்மா' என்ற புத்தகமும் ஸ்வேதா தேவியின்னுடையதே அதுவும் புரட்சியாளனாய் இருந்து இறந்த தன மகனை பற்றிய தாயின் புரிதல்கள் பற்றியது, அந்த நவலில் தாய் தன முகத்தில் இருந்த கருவளையத்தை மிகவும் ரசிப்பாள் அது தன மகனுக்காய் தான் கொண்டிருந்த நேசத்தின் கடைசி மிச்சம் என்று அதை ரசித்து பார்க்கும் அந்த தாயின் நேசம் என்னை மௌனமாக்கி மனதில் சுமைஏற்றி இருக்கிறது. இந்த வகையில் ஈர்க்கபட்டு சில மொழிபெயர்ப்பு நாவல்களையும் சிறுகதை தொகுப்புக்களையும் படித்ததுண்டு. மலையாள எழுத்தாளர்களான தகழி, வைக்கம் முகமது பஷீரின் கதைகள் வெகுவாய் என்னை பாதிப்பில் ஆழ்த்தியவை.

தமிழில் சா.தமிழ்செல்வனின் 'வெயிலோடு போய்' எனக்கு மனதிற்கு மிகவும் நெருங்கிய உணர்வை ஏற்படுத்திய சிறுகதை தொகுப்பு ஏனெனில் எங்கோ அந்துவான காட்டில் கஷ்ட படுபவர்களை பற்றி வாசிப்பதற்கும் நம் பக்கத்து
வீட்டில் சங்கட படுபவர்களை அறிந்து கொள்வதற்கும் வித்தாயசம் இருக்கத்தானே செய்கிறது. கோயில்பட்டியின் தீப்பட்டி தொழில்சாலையால் பாதிக்கபட்ட சிறுவர்கள் குடும்பங்கள் பற்றிய அற்புத கதை உலகம்.
அதில் வந்த அசோக வனங்கள் கதை(இந்நாளில் பூ படமாய் வெளி ந்திருகிறது) என்னை மிகவும் ஈர்த்ததுண்டு என்ன ஒரு காதல் என்று வியந்து போயிருக்கிறேன். பல ணி நேரங்கள் அந்த கதையில் என்னை பொருத்தி பார்த்து புளங்காகிதம் அடைந்திருக்கிறேன்.இப்படி எதையாவது வாசித்து விட்டு சிந்திப்பது ரசமான விஷயமாய் இருக்கும். சுந்தர சுவாமியின் நகைச்சுவை உணர்வுடன் கூடிய கதையாடல் சிந்தித்து மனதில் தேக்கி பார்த்து மறுபடியும் வாசிக்க அருமையாய் இருக்கும், ஒரு முறை நான் ராமேஸ்வரம் போய் திரும்பி வரும் போது 'ஜெ .ஜெ சில குறிப்புகள்' வாசித்தபடி ஊர் திரும்பினேன், ராமேஸ்வரத்து பாம்பன் பாலத்தில் ஆளை அள்ளும் காற்றும் அந்த தூரத்து பச்சியமாய் தெரியும் தீவுகளும் ஒவ்வொரு முறை அந்த நாவலை கையில் எடுக்கும் போதும் எனக்கு நினைவுக்கு வரும். கி. ராஜநாராயனையும் லா .சா.ராமாமிர்ததையும் சொல்லாமல் தீராது, கி.ராவின் 'பிஞ்சுகள்' படித்து விட்டு பல நாட்கள் பறவைகளின் முட்டைகள் சேகரிக்க எண்ணியதுண்டு, அவரின் 'கோப்பல்ல கிராமத்தில்' வரும் நாட்டார் கதைகள் அந்த நாட்களின் ராஜாக்களும் ராணிகளும் எப்படி இருந்திருப்பார்கள் என்று தாத்தா சொல்லி கேட்கும் ஒரு நிறைவை தரும். லா. சா. ராமாமிர்தம் வர்ணனைகளின் வள்ளல், சின்ன விஷயத்தை கூட எப்படி ஒரு அற்புத கண் கொண்டு பார்க்க முடியும் என்று சொல்லும் அற்புத எழுத்து அவரது, ஒரு குழந்தை தாயிடம் பசியாறி முடிந்த உடன் அதன் வாயில் எஞ்சி நிற்கும் அந்த பாலோடு அது சிரிக்கும் அழகை இரண்டு பக்கம் அவரால் மட்டுமே எழுத முடியும்(ரசிக்கும் படி).

என்னுடைய பள்ளி நாட்கள் முடிந்து நான் கல்லூரியில் சேர தயாராய் இருந்த அற்புத நாட்கள் அவை. எவ்வளவு பெரிய புத்தகமாய் இருப்பினும் 2 நாட்களுக்குள் முடித்து விட்டு, மாலைகளில் கிருஷ்ணன் கோயில் திறப்பு மணியோசை கேட்டபடி புத்தகம் துளாவும் அந்த நாட்களில் நான் என்னை பெரிய அறிவு ஜீவியாய் நினைத்து கொள்வேன், நாவல்கள் தந்த மனவெளி ஒரு புறம் இருக்க கணையாழியில் நான் வாசித்து எனக்குபுரியமலே இருந்த கவிதைகள் திடீர் என்று ஒரு மாய தருணத்தில் புரிய தொடங்கிய பொது என் வாசிப்பின் மற்றொரு வாசல் திறந்து கொண்டது, இந்த முறை திறந்த வாசலின் வழி ஜிலு ஜிலு என குழுமையான காற்றும் வீசியதெனில் கதவை மூட தோன்றுமா என்ன ?

வாசிப்பின் சுகந்தம் தொடரும்...

3 comments:

எல் கே said...

:)))

Madumitha said...

நீங்கள் சொன்ன அத்தனையும்
முத்துக்கள்.
தொடருங்கள்.

Ayyanar Viswanath said...

good to read ..