கும்புடுரேணுங்கோ...!
தேடிச் சோறுதினம் தின்று பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்

வாடி துன்பம் மிக உழன்று பிறர்

வாட பல செயல்கள் செய்து - நரை

கூடி கிழப்பருவம் எய்தி கொடும்

கூற்றுக்கு இரையென பின் மாயும்

இந்த வேடிக்கை மனிதரைப் போல் நானும்

வீழாவெனென்று நினைத்தாயோ...!

பாரதியார்.

இந்த பாட்டு சின்ன வயசுலயே என் மண்டைல ஆழமாய் பதிந்து போச்சு, மீசை இல்லாத பாரதி கனக்கா சுத்திட்டு இருந்த நாட்கள் அதெல்லாம், நம்ம வேற வீட்டுக்கு ஒரே புள்ளையா தட்டிக்கேக்கவும் ஆள் இல்ல..... நான் சாதிக்க பிறந்தவள்னு ஒரு கர்வதோடவே திரிஞ்ச காலம். ஆனா ஒரு விஷயம் வெறும் பேச்சு மட்டும் தானே ஒழிய பெருசா ஒண்ணும் செய்யல, ஐ.ஏ.ஸ் ஆகணும் எல்லாருக்கும் உதவணும்னு கனவு இருந்தது ஆனா அதுக்கு எப்ப பாரு படிக்கனும்னா நமக்கு தான் கசக்குமே அதனால என்ஜினியரிங் தான் கிடைச்சது.... அத படிச்சு முடிக்கவே ஆவி அத்து போச்சு நல்ல வேளை டா சாமி நம்ம ஐ.ஏ.ஸ் லாம் படிக்கலனு நினைச்சுகிட்டேன். இப்ப தான் மறுபடியும் நம்ம பாரதி நெனப்புக்கு வராரு.... சரி எதோ பெருசா செய்ய கிளம்புனோமே ஒண்ணுமே செய்யலியேனு நினைச்சு இந்த ப்ளாக் அ தொடங்கிட்டேன் நீங்க தான் ஆதரவு தரணும்..... அப்பா...! பிள்ளையார் சுழி போட்டாச்சு. உங்கள் வரவை என்றும் விரும்பும்


அன்பிற்கு இனியாள்.

9 comments:

செந்தழல் ரவி said...

vaanga valthukal..mudinja unga blogai thamilmanam and theku da add pannunga so niraya peru vandhu padipaanga

Iniyal said...

Nandri ravi. kandippa add panren procedures theriyathu.... konjam guide panna mudiyuma....?

Sugar said...

THE BEST !!......
Jenil, excellent !
Photos, simply superb !!
Kan munnaadi, namma oorai kondu vandhu niruthiyadhu !

No more words !!
Please give me lil more time to give more feedback and additions !!

Sugar said...

Sugar..na Naaandhaan !! Naaandhaan !! Naaandhaan !!

anand said...

unarvugalai padampidiththa jenilukku
oru sabaash...
adhai
ulagamayamaakkiya indhuvukku
oraayiram sabaash!!!

Iniyal said...

Anand romba nandri varugaikum aatharavirkum.
Adikadi varaveanum.

Anbudan Iniyal.

Iniyal said...

Sugar yaarungo.... naanthaan naanthaana.... peara solrathu, varugaiku romba nandri.
Innum niraiya time tharen, porumaiya vimarchinga.....

Anbirku Iniyal.

Anonymous said...

"Sorgame Endralum adhu naamoora pola varuma" nu paattu irukke.. andha paatukku sirandha udharanam namma oor dhaan pa..
Pasumai+Sezhippu = Ambai

Un ezhuthu pani thodara en vazhthukkal Indhu ma..

Vidhya

Iniyal said...

"Sorgame Endralum adhu naamoora pola varuma"

நிஜமான வார்த்தைகள்..... சும்மாவா பாடியிருக்காங்க....

நிஜமான வார்த்தைகள்..... சும்மாவா பாடியிருக்காங்க....
நன்றி வித்யா வருகைக்கும் வாழ்த்துக்கும்....

அன்பிற்கு இனியாள்