எனக்கு பிடித்த திரைப்படம் பற்றி எழுத வேண்டும் என்று பல நாட்கள் எண்ணி இருந்தேன்,அதற்கான நேரம் இன்று அமைகிறது என்றே தோன்றுகிறது, கட்டாயத்தின் பேரில் அலுவலகம் தங்க நேர்ந்த போது சங்கீத ஸ்வரங்கள் பாடலை கேட்டேன்। மணிரத்னம், பாலசந்தர்,பாரதிராஜா, பாலுமஹேந்தரா, மஹேந்திரன் என்று என்னை கவர்ந்த இயக்குநர்கள் பலரின் படங்கள் இருக்கிறது, அதில் அழகன் பலரின் கண்களுக்கு பரவலாய் படவில்லை என்றே தோன்றுகிறது, நம் மக்கள் பலருக்கு அது பிடித்த படம் தான் எனினும் அதை பற்றி நான் விமர்சங்கள் அதிகம் பார்த்தது இல்லை, எனக்கு அந்த படத்தில் பிடித்த சில விஷயங்களை இங்கேசொல்ல விழைகிறேன்.
அழகன் படம் என்றதும் எனக்கு நினைவுக்கு வரும் சில விஷயங்கள்:
பட்டு விரித்தது போன்ற அந்த புல் தரையில் வெள்ளை உடையுடன் பானுப்பிரியா ஆடும் நடனம், கூடவே கருப்பு கண்ணாடி அணிந்து அவரை ரசித்து சாதிமல்லி பூச்சரமே பாடும் மம்மூட்டி।
"நம்ம வேற வீட்ல பிறந்து இருக்கலாம் டா", அந்த படத்தில் மம்மூட்டியின் மகனாக வரும் கண்ணடி சிறுவன் அடிக்கடி சொல்லும் வாக்கியம் இது। அந்த குழந்தைகளின் உலகம் அழகாய் காட்டப்பட்டு இருக்கிறது।
சங்கீத ஸ்வரங்கள் பாடலின் இறுதியில் வரும் தூர்தர்ஷனின் விடியலுக்கான இசை।
மம்மூட்டியின் குழந்தைகளுக்கு அம்மா என்று காட்டப்படும் ஒரு பெண்ணிண் திரும்பிய தோற்றம், நமக்கே அவர் முகத்தை பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது। அது பாலசந்தரின் தனித்துவம், அழகான ஹைக்கூ।
"நான் தான் அதிரப்பள்ளி சொக்கு" என்று சுரேஷ் பாபு(?) அந்த காலத்தில் அவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக வருவார் என்று நினைக்கிறேன், நமக்கே எரிச்சல் வரும் அளவுக்கு சிறப்பாக நடித்திருப்பார்।
இனி கதைக்கு வரலாம், படத்தின் கதை மிகவும் சிறியது, தொழிலதிபர்(ஊரிலேயே பிரபலமான ஹோட்டெலின் முதளாலி) நம் கதையின் நாயகன், உழைத்து முன்னுக்கு வந்தவர்।அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள், அவரின் திறமைகளால் ஈர்ககப்பட்டு மூன்று பெண்கள் அவரை அணுகுகிறார்கள்(மதுபாலா, பானுப்பிரியா, கீதா), அதில் அவர் யாரை விரும்புகிறார் யாருடன் இணைகிறார் என்பதே கதை।
மதுபாலா குழந்தைத் தனமாகவே இருக்கிறார், அவர் செய்யும் குறும்புகள் சில வேளைகளில் அலுப்பூட்டுகின்றன, மம்மூட்டியை அவர் காதலிப்பதாக சொல்லி செய்யும் சேட்டைகள் ரசிக்கக் கூடியவை। எனினும் முடிவில் என்னையும் உங்கள் குழந்தைகளில் ஒருவரை நினைத்து கொள்ளுங்கள் என்று சொல்வது அவ்வளவு உருக்கமாய் இல்லை। அவர் சொல்லும் பொய்களுக்காய் இணைக்க பட்ட சில காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்।
கீதா அறிவு ஜீவி பேராசிரியராய் வருகிறார், அவரை மம்மூட்டி விரும்பவில்லை என்று தெரிந்த உடன் முதலில் கோபப்பட்டு பின் அழுது சமாதானமாகிறார், அவரை பற்றி பெரிதாய் சொல்ல எதுவும் இல்லாமல் பொய் விடுகிறது।
முக்கியமான கதாநாயகியாக வரும் பானுப்பிரியா இந்த படத்தில் சிறப்பே அவரின் கொடி இடையும், மயிலிரகு போன்ற அவரின் நடனமும் தான்। அவரின் நடனம் பற்றி, மம்மூட்டி பேசும் சில வார்த்தைகள், மம்மூட்டி கீதாவை விரும்புகிறாரோ என்று அவர் மேல் கோபம் கொன்டு பரதம் ஆடி கொண்டே பேசும் அந்த காட்சிகளில் எல்லாம் அழகான காதல் கவிதைகள் ஒழிந்து கிடக்கின்றன। "மழையும் நீயே வெயிலும் நீயே" என்ற வைரமுத்து வரிகள் அருமை. மரகதமணியின் "சங்கீத ஸ்வரங்கள்" இன்றும் இரவில் பேசும் காதலர்கள் பாடி கொள்ளும் பாடல்.
குழந்தை நட்சத்திரமாய் டிஸ்கோ ஆடி கொன்டே வரும் சிறுவன், துறு துறு கண்களுடன் வரும் பெண் குழந்தை, கண்ணாடி பையன் எல்லாரும் மனதில் நிற்கிறார்கள்.குழந்தைகளிடம் நல்ல அப்பாவை, பானுப்பிரியாவின் ரசனைகளை உணர்ந்த காதலனாய்,மதுபாலாவிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் ஒரு சராசரி ஆணாய், கீதா அவரை அவமான படுத்தும் போது பொங்கி எழும் தருணங்களில் எல்லாம் தன் நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளார். இந்த படத்தின் சிறப்பே மம்மூட்டி ஒன்றும் பெரிய அழகர் இல்லை, அவர் கால கட்டதில் கமல் போன்ற எராளமான அழகிய நாயகர்கள் இருந்தார்கள் எனினும் அவரின் நடிப்புகாகவே சிறப்பாக பேசப்பட்ட படம் இது. தூர்தர்ஷனில் பார்த்தால் இன்னும் நல்ல உணர்வை தரும்,கண்டிப்பா அடுத்த 6 மாதங்களில் திரையிடுவார்கள்.
12 comments:
hi minanjal-idayangal,
Eppadi avlo surea sollarega, innum six monthla poduvagannu.
Nandri Sahara, unga varugaiku.
Kandippa DD la sila list of movies irukkum athu six months la kandippa marupadiyum poduvanga. Mouna ragamum antha list la varum, rarely podama pona neenga k tv paarka vaippu irukku.
Natpirku Iniyal.
இந்துமதி,
எனக்கும் அழகன் மிக மிக பிடித்த படங்களில் ஒன்று.
பல முறை பார்த்து பார்த்து ரசித்து இருக்கிறேன்.
உங்கள் விமர்சனம் படித்தேன். மறுபடி படம் பார்த்த உணர்வு.
ப்ரியா.
thangal varuhaikkum karuththukkum mikka nandri.
thodarndhu sandhippom.
marubadiyum padiththen.
thathithom paattu pathi edhuvme sollalaiye neenga....:-(
Nandri priya, unga varavirkum vimarsanagalukkum.
Natpirku iniyal.
தோழியே... ஒரு தமிழனாய் என்னால் தாங்கிக்கொள்ள முடியாதவற்றுள் தலையாயது சொற்பிழையும் சந்திப்பிழையும் ஆகும். அதிலும் தமிழச்சியாய் உன்னை சுவீகரித்துக்கொண்டு இங்ஙனம் பிழைகள் மிக செய்திருப்பதை என்னால் தாங்கிக்கொள்ள இயலாமல் சுட்டிக்காட்டியிருக்கிறேன். தயவுசெய்து பிழைகளை திருத்துவாயாக. என் வார்த்தைகள் உன்னை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பாயாக...
இந்து,
எப்படி இருக்கீங்க? கொஞ்ச நாளாச்சு.. வந்து!! :)
அருமை போங்க. மனசுக்குப் பிடிச்ச மத்தவங்களைத் துன்புறுத்தாத விஷயங்கள் எப்பவுமே செய்யலாம் :)
கலக்கிட்டீங்க.. அழகன் படம்னா எனக்கு ஞாபகம் வர்றது.. எப்பவுமே 'சாதி மல்லிப் பூச்சரமே' தான் :) அருமையான பாட்டு!
நல்ல விமர்சனம்.. தலைப்பில் 'எனக்குப் பிடித்த திரைப்படம்' என்றிருக்க வேண்டும்.. அந்த 'த்' வரக்கூடாது!
Nandri ananth, unga varugaiku namma vedavalli madam enakku tamil paritchai thaalil santhi pizhaigalai thiruththavum nu ezhuthi irunthanga, naan mattum enna aasa patta thappu seiyyuren, namakku therinja tamil avvalave..... intha blog a paaththa avanga athaiye comment a poduvangalo.........:(
நல்லதொரு படத்தை பற்றி நல்லதொரு பதிவு. மீண்டும் படம் பார்க்க தூண்டிவிட்டீர்கள்.
Romba nandri nilarasiganukku.
அழகனில் வரும் "மழையும் நீயே வெயிலும் நீயே" மிக அற்புதமான பாடல்.இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் என்னையே நான் மறப்பேன்.
Post a Comment