காற்றினிலே வரும் கீதம்


அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் ஒரே கோலாகலமாய் இருக்கும் ஏப்ரல் மே மாதங்களில். அநேகமாய், சித்தி அததைகள் அவர்களின் பிள்ளைகள் என்று அனைவராலும் நிரம்பி கிடக்கும் எங்கள் வீடு. என் சித்திகள் இருவர் அப்போது வட்டாட்சியர் அலுவலகதில் பணி செய்து கொண்டு இருந்தார்கள், அன்று தான் எங்களுக்கு அவர்களின் ரகசியம் ஒன்று தெரிய வந்தது அவர்கள் இருவர் தான் அந்த அலுவலகத்தின் ஆஸ்தான பாடகர்கள் என்று, தெரிந்த உடன் னான்கலும் அவர்களை வர்புறுத்தினோம். அவர்களும் எந்த விதமான கூச்சமும் இல்லாமல், சூலமங்களம் சகோதரிகள் போல இனிமையான குரலில் பாட தொடங்கினார்கள், பாடல் "காற்றிலினே வரும் கீதம்". அந்த பாடலை அதற்கு முன் நான் கேட்டதே இல்லை, அந்த சிறு வயதில் என்னால் அந்த பாடலில் இருந்து மீளவே முடியவில்லை. அதை யார் பாடி இருக்கிறார்கள் என்று என் சித்தியிடம் கேட்டேன் , MS அம்மா என்று சொன்னார்கள், பக்த மீரா படத்திர்காக பாடிய பாடல் அது.

அவர்கள் சொன்னது எனக்கு அவ்வளவாய் புரியவில்லை, எனக்கு அவர்களை பற்றி அதிகம் அறிந்து கொள்ளும் ஆவல் வரவில்லை,அந்த பாடலை பிடித்தது அவ்வளவே. ஓரு வேளை எங்கள் சித்திகள் பாடியதால் கூட அந்த பாடல் பிடித்திருக்கலாமோ என்றும் தோன்றியது. பல நாட்கள் கழித்து நான் மறுபடியும் அந்த பாடலை ஒலியும் ஒளியுமில் பார்த்தேன், அப்போது தான் அந்த குரலின் இனிமையை முழுசாய் உணர முடிந்தது, எவ்வளவு இனிமையான குரல்,அப்போது நான் கொஞ்சம் வளர்ந்து இருந்ததால், என் ரசிக்கும் திறன் சற்றே கூடி இருந்தது. அப்பாவிடம் அவர்களை(MS) பற்றி கேட்டேன், உடனே அப்பா அவர்கள் எவ்வளவு சிறந்த பாடகி என்று எனக்கு விளக்கினார், சுதந்திர போராட்டங்களுக்கெல்லாம் அவர்கள் பாடி இருக்கிறார்கள் என்று தெரிய வந்ததும் என் மன குளத்தை நோக்கிய படிக்கட்டுகளில் மெல்ல மெல்ல பயணித்தார், இன்று வரை கலங்கி கிடக்கிறது இந்த குளம் அவர் நினைவுகளில்.

எங்கள் பாட்டி ஒரு நாள் நான் எனக்கு நீல நிறத்தில் புத்தாடைகள் வேண்டும் என்று கேட்டதும், MS ப்ளுஆ என்று கேட்டார்கள் ஆச்சர்யமானேன், அதென்ன MS ப்ளு என்று, பின்பு தான் தெரிந்தது கச்சேரிகளுக்கு அவருக்கு பிடித்த ஊதா நிறத்தில் MS அம்மா அடிக்கடி வருவார் என்று, அதுவும் தனக்கென்ற ப்ரத்யேக ஊதாவில் அடிக்கடி வருவார் என்று.பொதிகை தொலைக்காட்சியில் மாலை வேளைகளில் அவர் பாடிய பழைய ரெக்கார்டுகளை ஒளிப்பரப்புவார்கள் அதை பார்த்து அறிந்து கொண்டேன். மங்களகரமான அவர் தோற்றமே அலாதி தான்.
எங்கள் தாத்தா இரவில் கல் திண்ணையில் படுத்து கொண்டு மணிக்கணக்காய் இரவில் MS அம்மா வின் பாடல்களை கேட்டு கொண்டிருப்பார், அந்த ரேடியோகளில் அடுத்து என்ன பாடல் வரும் என்ற ஆவலோடு கேட்கும் போது இன்னும் ரசனைக்குறியதாய் கழியும் பொழுதுகள்.என் வாழ்நாளில் ஒரு முறையேனும் அவர்களின் கச்சேரியை கண்கூடாக பார்த்து விடவேண்டும் என்றே நினைத்து இருந்தேன், ஆனால் நான்கோவையில் கல்லூரியில் படித்திருந்த நாட்களிலேயே அவர்கள் மறித்து விட்ட விஷயம் எனக்குள் அதிர்ச்சியை எற்படுத்தியது. அது என்னைஎவ்வளவு பாதித்தது என்று ஒரு நாள் அவர்களின் "பாவயாமி" என்ற கிருஷ்ண தாலாட்டு பாடலை கேட்டு கொண்டு இருந்த போது என்னை அறியாமல் என் கண்கள் கலங்கி இருந்த போது தான் உணர்ந்தேன், பக்தி என்ற உணர்வை பாடலின் வழி கொண்டு வர முடியும் என்று அப்போது தான் உணர்ந்தேன்.
அடிக்கடி தொலைக்காட்சியில் வரும் விளம்பரம், அதில் குறை ஒன்றும் இல்லை என்று அவர் பாடி இருக்கும் ஒரு வரியில் எல்லா குறைகளும் மறந்து போகும், என்னை இவ்வளவு நெகிழ வைத்த அவரின் குரலில் பலரும் நெகிழாமல் இருந்திருக்கலாம், எனினும் அந்த குரலில் பக்தி பாடல்கள் பாடும் போது எற்படும் பக்தி உணர்வை எத்தனை பத்திகள் எழுதினாலும் விளக்க முடியாது.மீரா என்ற ஒரு பக்தை வாழ்ந்திருக்கலாம், இல்லாமலும் இருந்திருக்கலாம் எனினும் MS என்ற பெயரில் மறுபடியும் வாழ்ந்தாள் மீரா. MS என்றால் கல்யாணம் ஆகாத பெண்களை குறிக்கும் அர்த்ததை மாற்றி அவர் பெயரை நினைக்க வைத்த MS நிச்சயமாய் ஒரு மஹா மனுஷி தான் இல்லையா.

6 comments:

Unknown said...

Hi Indhu..

Happened to visit your blog recently.. This article "Katriniley Varum Geetham" is superb da. I too love MS Subbalakshmi's magical voice. Happy n enjoyed reading your article on her. She is one another nightingale of India.. :)

Rgds,
Vidhya

இனியாள் said...

Hi vidhya,

Thanks for visiting and ur comments da. In my childhood i never thought i would get impressed to a person like this, but it happened its that magical knot which made me write this.Keep visiting.

cheers,
indhu

சலம் said...

குறையொன்றுமில்லை பாட்டைப் பற்றி சொல்லவேயில்லை. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு அதுதான்.

இனியாள் said...

"அடிக்கடி தொலைக்காட்சியில் வரும் விளம்பரம், அதில் குறை ஒன்றும் இல்லை என்று அவர் பாடி இருக்கும் ஒரு வரியில் எல்லா குறைகளும் மறந்து போகும்..."

Atha paththi thaan venkat... Varugaiku nandri.

jagatheesh said...

Indhu ur article 'Katriniley Varum Geetham' is really superb.. after reading this article i started searching this song.. and very eager to listen...long back i have listened to this song.. but ur article made me to listen it again..
keep blogging...

இனியாள் said...

Romba nandri jagatheesh. M S is a legend u should really hear it.