அழகிய நாட்கள்



பாட்டி வீட்டு முத்தத்து சீதாமரம்
பெரிய கோவில் வெளிப் பிரகாரத்தின் பலாமரம்
சூரஸம்ஹார சப்பரதுடன் வரும் மிட்டாய் வாச்சுத் தாத்தா
தாத்தாவோடு வெளியில் போனால் கிடைக்கும் பழரசம்
ஆத்தங்கரை படித்துறைகளின் ப்ரத்யேக துணிச் சோப்பு வாசம்
தீப்பெட்டியில் சேர்த்து வைத்த பட்டுப் பூச்சிகள்
மயிலிறகின் குட்டிகளுக்காய் புத்தகத்தில் அரிசி
பள்ளி பேருந்தில் இருந்து எட்டி வாங்கும் சீனி போன்டா
அம்மா எழுதி பழக்கப் படுத்திய மைப்பேனா
வாடகை சைக்கிள் எடுத்து ஓட்ட கற்றுக்கொண்ட தருணம்
வெள்ளை அடிப்புகளில் கிடைக்கும் அப்பாவின் சின்ன வயது படங்கள்
தினமும் இரவு சித்தப்பா சொல்லும் மந்திரவாதிக் கதைகள்
இவற்றில் பாதியாவது கிடைக்குமா என் குழந்தைக்கு.......

8 comments:

ப்ரியா கதிரவன் said...

Very good one Indumathi.

இனியாள் said...

Thanks for visiting priya.

Anonymous said...

unmai...inda kaalathil thaatha paatti kooda busy'a irukkaanga..what do u say....kavithai aaha oho

இனியாள் said...

unmai thaan, ellarum busy a irukkanga. thanks for visiting anni :)

Rajarajan said...

இந்த அழகிய நாட்களின் வாசம் நம்மைபோல் நமது சந்ததிக்கு கிடைக்க தாமிரபரணி மாதாதான் அருளவேண்டும்.நன்றி எனது பால்யத்தை நினைவூட்டியமைக்கு.

இனியாள் said...

Nandri rajarajan, ungal varavu ennai ananththa paduthukirathu.

SANKAR SALVADY said...

Believe me, I have tears in my eyes..

இனியாள் said...

Nandri shankar.