மௌனராகம்- எனக்கு பிடித்தத் திரைப்படம்


எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பு ஏற்படுத்தாத திரும்ப திரும்ப என்னை பார்க்க தூண்டுகிற படங்களில் முதல் இடம் மௌனராகதிற்கு உண்டு. மணிரத்னதிற்கென்று ப்ரத்யேக ரசிகர்களை ஏற்படுத்திய படம் இதுவாகவே இருக்கும். ரேவதி, மோஹன், கார்த்திக் என்று மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் சுழலும் ஒரு முக்கோன காதல் கதை தான் இதுவும், எனினும் சொல்லி இருக்கும் விதம் நம்மை பிரமிக்க வைக்கும்.


திவ்யா என்று அழைக்கப்படும் ரேவதி படு சுட்டியாகாவும், எதார்த்தமான உணர்ச்சிகளை வெளிபடுத்தும் பெண்ணாகவும் நம் னதில் நிற்கிறார். பெண் பார்க்க வரும் சடங்கை எதிர்க்கும் திவ்யாவை நாமும் பிரதிபலிக்கிறோம், அவருக்கக காத்திருக்கும் மோஹனிடம் ரேவதி பேசும் விஷயங்களுக்கு அவர் சொல்லும் ஒரு வரி பதில் அந்த கதாபாத்திரத்தின் அழுதத்தை சொல்கிறது. மோஹன் போன்ற ஒரு பொறுமையான கணவன் வேண்டும் என்று இந்த படத்தை பார்த்து விட்டு எத்தனை பேர் எண்ணியதுண்டு அந்த நாட்களில்.

திவ்யாவுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் சந்திரனுடன் திருமணம் நடக்கிறது. அவளுடைய அப்பாவிற்கு இதய நோய் ஏற்படவே அவள் திருமணதிற்கு சம்மதிக்கிறாள். புதுமண தம்பதியர் டெல்லியில் ஒரு அழகான வீட்டிற்கு பயணபடுகிறார்கள். அங்கும் திவ்யா சந்திரனுடன் தாம்பத்ய வாழ்வில் ஈடுபட மறுத்து, விவாகரத்து கேட்கிறாள். அதற்காக அவள் சொல்லும் காரணம் மனோஹர்(கார்த்திக்).

கதை திவ்யாவின் கல்லூரி நாட்களுக்கு செல்கிறது, அங்கே அவள் மனோஹரை சந்திக்க நேர்கிறது. இது இந்த படத்திலேயே பலரால் விரும்பப் படுகிற காட்சிகள் நிறைந்த பகுது. மனோஹராக வரும் கார்த்திக் தன் துரு துரு செயல்களில் திவ்யாவை கவர்கிறார். அவர் பல அடிதடிகளில் ஈடுபடும் துடிப்பு மிகுந்த இளைஞன். இதில் மிஸ்டர் சந்திரமௌலி என்று கார்த்திக் திவ்யாவின் தந்தையை அழைக்கும் காட்சி வெகு பிரபலமானது, அப்படி அழைததற்காக கோபப்பட்டு தண்ணீரை விசிரி அடிக்கும் திவ்யாவிற்குள் மனோஹர் எவ்வளவு இயல்பாய் பொருந்தி கொள்கிறான் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. திவ்யா-மனோஹர் இவர்களுக்கு இடையில் வரும் காதல் காட்சிகள் வெகு ஸ்வராஸ்யமாய் படமாக்க பட்டிருக்கிறது. காதலில் வீழ்ந்தவர்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று என் சின்ன வயதில் நான் நினைத்துக்கொள்வேன். "நீ சொன்ன உடனே தான் தெரிஞ்சது நீ அழகா இருக்கனு" இப்படி சொல்லும் கார்த்திக் இறந்து விடுவது திவ்யாவை போலவே நம் மனதையும் பாதிக்கிறது.

திவ்யா சொல்லும் எல்லா கதைகளையும் கேட்டுவிட்டு பொறுமையாய் "எனக்கு உன் கடந்த காலத்தை பற்றி கவலை இல்லை, உன்னோட வருங்காலத்ததான் வாழ விரும்புறேன்" என்று அனாயாசமாய் சொல்லி விடும் சந்திரனை நம்மால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. பின்னாளில் திவ்யா மனம்மாறி வரும் போது ஒதுங்கி கடுமையாய் நடந்து கொள்ளும் சந்திரன் மீது அப்போதும் நமக்கு கோபம் தோன்ற மறுக்கிறது. இவர்களின் டெல்லி வாழ்க்கையை காட்டும் போது, ஒலிப்பதிவை பாராட்டாமல் இருக்க முடியாது. படுத்திருக்கும் திவ்யாவின் மீது மேலிருந்து விழும் ஒளி, வளைந்த மாடி படிகளில் இருவரும் சந்தித்து கொள்ளும் தருணங்கள், தாஜ் மஹாலின் மற்றும் யமுனையின் மாலை அழகு இப்படி பல அருமையான காட்சிகள்.

திவ்யாவின் மனமாற்றத்தை புரிந்து கொள்ள முடியாமல் சந்திரன் வருந்தும் பொழுதுகள், சந்திரனிடம் வெளியிட முடியாமல் தன் நேசத்தை மறைத்து தவிக்கும் திவ்யாவின் மனநிலை எல்லாவற்றையும் வார்த்தைகளை விட வெகு நேர்த்தியாய் சொல்லி செல்கிறது ராஜாவின் இசை. திவ்யா ஊருக்கு கிளம்பும் தருண்களில் அவள் மனதிலும் சந்திரன் மனதிலும் மேலே எழும் உணர்ச்சிகளை தன் இசையால் மீட்டி இருப்பார் ராஜா. மனோஹராய் வரும் கார்த்திகின் குறும்புகளினூடேயும் கசிந்து நிற்கும் ராஜாவின் துள்ளல் பின்னனி இசை. பாடல்கள் அனைத்தும் அருமை. கணவன் மனைவி உறவு, காதல் முதலிய விஷயங்களை என் சின்ன வயதில் முதல் முதல் புரிந்து கொண்டு பார்த்தது இந்த படத்தில் தான். இதுவரை இதை போல இவ்வளவு நுன் உனர்வுகளை சொல்லும் படம் வெளிவரவில்லை என்றே தோன்றுகிறது. தமிழ் சினிமாவுக்கு மணிரத்னம் ஆற்றிய சிறந்த கலைத்தொண்டு என்று மட்டுமே சொல்ல முடிகிறது.

9 comments:

KARTHIK said...

//இவர்களின் டெல்லி வாழ்க்கையை காட்டும் போது, ஒலிப்பதிவை பாராட்டாமல் இருக்க முடியாது. படுத்திருக்கும் திவ்யாவின் மீது மேலிருந்து விழும் ஒளி, வளைந்த மாடி படிகளில் இருவரும் சந்தித்து கொள்ளும் தருணங்கள்,//

இந்தப்படத்தின் இசை இருக்கே.அதிலும் பின்னனி இசை, இசை ஞானிக்கு நிகர் அவர் மட்டுமேன்னு சொன்ன படம்.

அப்புறம் வசனம் சும்மா நச்சு நச்சுனு இருக்கும்.

ஒளிப்பதிவு வாய்பேஇல்லை.

மொத்ததுல இனி அவரே (மணி)நெனச்சாலும் இப்படி ஒரு படத்த மறுபடியும் குடுக்கமுடியாது.

நல்ல பதிவுங்க.

இனியாள் said...

Nandri karthi, unga varavirkum karuthirkum, vasanatha paththi sollama vittathu en thappu thaan. Mouna ragam pathi unga karuthu appatamana nijam.

Anonymous said...

Un varikalai padikkum pothu meendum padam partha oru unarvu. Anaivarukkum piditha padam ethu. Meendum nenaivil kondu vanthamaikku Nandri indhu.

இனியாள் said...

nandri kalai varugaikum anbirkum.

Anonymous said...

நல்ல ரசிக்கும்படியான பதிவு.
இன்னொருமுறை இந்த படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

அத்திரி said...

விமர்சனம் நல்லா இருந்திச்சி

butterfly Surya said...

பகல்நிலவு, மெளராகம் தவிர மற்ற மணிரத்னம் படங்கள் சுமார்தான்.

நன்றாக எழுதியுள்ளீர்கள்.

உலக சினிமா குறித்த எனது வலை பார்க்கவும்.

நன்றி.

selva ganapathy said...

wonderful!....

I still rate this as one of the best films ever made.... its simply thundering performances from the lead actors and a soothingly told story by mani

இனியாள் said...

Nandri surya, aththiri, vannaththupoochiyar matrum selvavirkum. Ungal varugaikum karuthirkum mikka nandri.