கனவானவள்தினமும் தொடரும் கனவு வேண்டும் எனக்கு
நேற்று நீ என் கனவில் விட்டு போன பாதச்சுவடுகளில்
இன்று என் நேசனீர் ஊற்றினேன்
நாளை அது மொட்டு விடலாம்,
மறுநாள் அது இதழ்விரிக்கலாம்,
இதையெல்லாம் காணவேனும் தினமும் வாயேன்.

2 comments:

kandhavelan said...

அன்புள்ள இனியள்

கவிஞர் என்று விளித்து ஒரு குறிபிட்ட வட்டத்துள் தங்களை நிறுத்திட இயலாது.

படைப்பாளி என்று அழைப்பதே சாலபோருந்தும்.

தங்களின் கவிதை அப்படி ஒரு அழகு..

தலைப்பு மட்டும் இல்லை என்றால் இந்த கவிதை இருபாலருக்கும் பொருந்தும்

ஒரு பெண்ணாக இருந்தும் தங்களால் ஒரு ஆணின் கனவுலகில் சஞ்சரிக்க முடிகிறது.,

சமீப காலத்தில் பெண்ணின் உலகில் புகுந்து ஆண் எழுதுவதும்.,ஆணின் உலகிலே பெண்கள் எழதுவதும் பரவலாக இருக்கின்றது.,

அனால் மேற்படி எழுதப்பட்ட அனைத்துப் படைப்புகளும் ரசிக்கும் படியாக இல்லை.

விதிவிலக்குகளும் உண்டு.

இரண்டாவது வகையை சேர்ந்தது தங்கள் படைப்பு.

வாழ்த்துகள்

கப்பியாம்புலியுரன்

Iniyal said...

Nandri kandavelan, ungal alosanaikum varugaikum. Naan kadakka vendiya padikattugal niraiya irupathaagave unarkiren. Eninum neengal athigamai pugalnthirupathai therikirathu.