சின்னஞ்சிறு வயதில்...











என் கவுன் நாட்களில்
எதோ ஒரு பழகொட்டையை
முழுங்கிய என்னை
வயிற்றில் மரம் முளைக்கும்
என்று பயமுறுத்தினாய் நீ
மரம் பெரிதாகிவிடுமே என
தண்ணீர் கூட குடிக்கவில்லை நான்
அம்மாவையும் தூங்க விடாமல்
முழித்திருந்து பார்த்த அந்த விடியலில்
புரிந்தது ஜனனத்தின் விசித்திரம்
எங்கே போனாய் என் பால்யங்களில்
கரம் கோர்த்த நீ
என் வயிற்றில் வளராமல் போன மரம்
என் மனதில் கிளைபரப்பி இருக்கிறது
அதில் இளைப்பாற ஒரு நாள் வாயேன்.

4 comments:

கப்பியாம்புலியூரன் said...

இந்த கவிதைல சில பல குறியீடுகளும் உவமானங்களும் இருக்கு அது எனக்கு புரிஞ்சும் புரியாமலும் இருக்கு...இது படிக்கிற வாசகர்கள் எல்லாருக்கும் இருக்கும் என்று தோன்றுகிறது....அதனால இந்த கவிதையோட சிறப்பே அதுதானோ ....

கப்பியாம்புலியூரன்

இனியாள் said...

Nandri kandavelan ungal varugaikum karuthirkum.

Priya said...

wow... very nice!

Joe said...

அழகான கவிதை,
அருமையான கற்பனை!