பல பூனைகளும் சில மனிதர்களும்....அது ஒரு அழகான இடம், மாமரங்களும் பலா மரங்களும் நிறைத்திருந்த சற்றே பெரிய வீடு. அணில்கள் பலா மரங்களில் அமர்ந்து சப்தமிடுவதை பார்த்து கொண்டே அந்த பால்கனியில் பல மணி நேரங்கள் கழித்து விடலாம், எனினும் அந்த வீட்டில் யாருக்குமே அதற்க்கு நேரம் இல்லாமல் தான் இருந்தது, எப்போதாவது வரும் கைபேசி அழைப்புகள் தான் அவர்களை அந்த பால்கனியில் கொண்டு சேர்க்கும். அடர்ந்த மரங்கள் நிறைந்த அந்த பகுதியில் ஆங்காங்கே திட்டு திட்டாய் சூரியன் சிதறி கிடப்பதை பார்ப்பதே அலாதியாய் இருக்கும்.

பகல் நேரங்களில் அந்த தெருக்களில் அடர்த்தியான ஒரு மௌனம் பரவி கிடக்கும் அது நம் மனதில் சொல்ல முடியாத ஒரு சோகத்தை ஏற்படுத்தும், எதையாவது கூவி விற்பவர்கள் கூட அந்த தெருவிற்குள் வருவதே இல்லை, எனினும் அந்த வீடு எல்லோருக்கும் பிடித்தமானதாகவே இருந்தது அந்த சில பூனைகள் வந்து சேரும் வரை.

முதலில் சாம்பல் நிறத்தில் ஒரு பூனை தான் இருந்தது, சாப்பிடும் நேரத்தில் நெருங்கி வரும் அதை சிலருக்கு தான் பிடித்திருக்கும். எப்படியோ அது பெருகி கால் கூட வைக்க முடியாத அளவு குட்டிகள் கிடந்தன. நல்லவேளை இந்த பூனைகள் மாடி ஏறி வரவில்லை, இவை பெரும்பாலும் தோட்டத்திலும் வாசல்களிலுமே சுற்றி திரிந்தன.

அந்த வீட்டிற்கு வரும் பெண்கள் இந்த பூனைகலாலேயே அந்த இடத்தை வெறுக்க தொடங்கினர். சாப்பிட கூட விடாத இவைகளை தூக்கி ஏறிந்தால் என்ன என்று தோன்றும் அளவுக்கு இவைகளை வெறுத்தனர். எனினும் அந்த பூனைகளுக்கு பால் ஊத்தவும் கீழ் கழுத்தை தடவி விடவும் சில ஆண்கள் இருக்க தான் செய்தார்கள்.

மழைக் காலத்தில் பூனைகளின் தொல்லை அதிகரித்த போது கூட அவைகளை யாருமே விரட்டவில்லை. வெளியில் எங்குமே போகாமல் அவை முழு நேரமும் மனிதர்களின் கால்களையே சுற்றி திரிந்தன. அவர்களுக்கு வேறு ஒரு சொந்த இடத்தில மாளிகை ஒன்றை கட்டி தந்தார்கள் சிலர், அதற்காய் இந்த பூனைகள் நிறைந்த வீட்டை காலி செய்தார்கள், புது இடத்தில அடர்ந்த மரங்கள் இல்லை, வெறிச்சோடி போன தெருக்களை பார்க்கவே முடியாது, சதா கால்களை சுற்றி கொண்டிருந்த பூனைகள் இல்லை. இப்போது அவர்கள் வீட்டில் இல்லை அலுவலகத்திற்கு மாறி இருந்தார்கள். வெறும் மனிதர்கள் நிறைந்த அலுவலகம். அந்த பூனைகள் அவைகளை மிகவும் வெறுத்த பெண்களின் மனதில் உலவி கொண்டு தான் இருக்கின்றன.

6 comments:

அண்ணாமலையான் said...

ஓஹோ...

அண்ணாமலையான் said...

ஆமா நீங்க என்ன கலாம்பாய் கோஷ்டியா? கனவுலே வாழ? கண்ண தொறங்க.. அருமையான உலகம் முன்னாடி இருக்குது...

புலவன் புலிகேசி said...

நம்ம அலுவலகத்தை பத்திதானே எழுதிருக்கீங்க..கவலைய விடுங்க நம்ம புது அலுவலகத்துக்கு அடுத்த வாரம் பூனைகள் வந்திரும்.

இனியாள் said...

ந்ன்றி அண்ணாமலையான். உலகத்த பாக்காம விட்டா பின்ன எப்படி எனக்கு பிடிச்ச மாதிரி கனவு காணுறது.

இனியாள் said...

ஹையோ வேண்டாம் புலிகேசி பூனைகளை எனக்கு பிடிக்காது, எனினும் அந்த அலுவலகத்தை மிகவும் பிடிக்கும். அந்த அலுவலகத்தை லகுவாக வீட்டில் இருப்பதை போல் உணர வைத்தது அந்த பூனைகள் தானோ என்று எனக்குள் தோன்றிய எண்ணங்க்ளை பதிவாக்கினேன்.

அண்ணாமலையான் said...

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.. நம்ம பக்கம் உடனே வந்து உங்க பொன்னான ஓட்ட போட்டு கமெண்டும் போட்டா ஆட்டோல மீட்டருக்கு மேல கேக்காம உங்கள கொண்டு விடுவாங்க..
(சொந்த செலவுல)