மனிதனும் மர்மங்களும்


சில நாட்களாக என் வாசிப்பு கொஞ்சம் குறைந்து விட்டிருந்தது, அதை கொஞ்சம் தட்டி எழுப்பிய புத்தகம் மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும், புத்தகமுகப்பிலேயே இது கொஞ்சம் பய அனுபவத்தை எற்படுத்தும் என்ற உணர்வை தரும் விதத்தில் எலும்புக்கூடுகள் காட்சி அளிக்கின்றன, எனினும் அதுவே ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது. பல பேய்கள் பற்றிய உண்மைகள் ஆராய்ச்சிகள் நமக்கு தெரிய வருகின்றது, இதில் நான் ரசித்த விஷயம் என்னவென்றால் ஆவிகளை நல்ல ஆவிகள், கொடூரமானவை என்றெல்லாம் பிரித்து கொள்கிறார்கள்..... பட்ட பகலில் சுமார் 12 மணிக்கு ரயிலில் அலுவலகம் வரும் பொழுது தான் இதை வாசிக்க ஆரம்பித்தேன், அந்த பகலிலும் எனக்கு பயத்தில் மயிர்க்கூச்சமேற்பட்டது, நல்லதே செய்தாலும் பேய்கள் என்றாலோ ஆவிகள் என்றாலோ எல்லாருக்கும் பயம் இல்லாமல் இருக்குமா என்று சொல்லி கொண்டாலும் இரவை நினைத்து கொஞ்சம் பயமாகவே இருந்தது.




இந்த புத்தகத்தை தொடங்கும் போதே மதன் சொல்கிறார் கற்பனாசக்தி அதிகம் இருப்போர், மென்மையான மனம் படைத்தோர் எல்லாம் இரவில் இந்த புத்தகத்தை படிக்க வேண்டாம் என்று, அதில் இருப்பது எல்லாம் நிஜமான சம்பவங்கள் தான், எதுவுமே மிகைப்படுத்த பட வில்லை ஆனால் நம் கற்பனைக் குதிரை சும்மா இருக்காதே, பொதுவாகவே எனக்கு யாராவது ஒரு விஷயத்தை சொன்னால் அதை கற்பனை செய்யாமல் இருக்க முடியாது, இதில் ஆவிகள் எல்லாம் வந்தால், என்னுடைய பக்தியை கூட இந்த புத்தகம் அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம், என்ன நடந்தாலும் படிப்பதை மட்டும் நிறுத்தக்கூடாது என்பதில் தீர்மானமாய் இருந்தேன்.

மதனின் எழுத்து நடை அலாதியாய் இருக்கிறது, பல புத்தகங்களிலும் வலைத்தளங்களிலும் சேர்த்த விஷயங்களாய் கூட இவை இருக்கலாம், எனினும் அதை சோர்வோ அலுப்போ எற்படாமல் அழகாய் விவரித்து இருக்கிறார், கற்பனைகள் அதிகம் சேர்காமல், பல தகவல்கள் நமக்கு சுவாரஸ்யமாய் கிடைக்கின்றன.

இந்த புத்தகத்தின் சிறப்பு வெறும் ஆவிகளும், பேய்களும் மட்டும் அல்ல வேறு சில மர்மமான விஷயங்களும் நம்மை சுற்றி நிகழ்கின்றன என்பதை சொல்வதிலேயே இருக்கிறது. வேற்று கிரக வாசிகள் பற்றிய தகவல்கள், பறக்கும் தட்டுகளில் வந்து இறங்கும் உருவங்கள் எல்லாம் பற்றி படிக்கவே ஸ்வராஸ்யமாய் இருக்கிறது. எம்.ஜி.ஆர் மற்றும் பானுமதி நடித்து பெயர் மறந்து விட்டது(பறக்கும் தட்டு என்றே நினைக்கிறேன்), 1960 அல்லது 1970களிலேயே வந்திருக்கும் என் பள்ளி நாட்களில் பார்த்திருக்கிறேன், அந்த படத்தில் வேற்று க்ரஹ வாசிகள் பறக்கும் தட்டில் வந்து நம் நாயகி பானுமதியின் இனிமையான காணதிற்காக அவரை அளித்து சென்று விடுவார்கள், நம் தலைவர் காதலியை தேடி அலைந்து இன்னொரு பறக்கும் தட்டில் வேற்று க்ரஹத்தில் போய் பானுமதியை காப்பாற்றுவதாக வரும் படம், நிறைய நகைச்சுவை காட்சிகள் உள்ள வித்தியாசமான படம் இது. இந்த கருப்பொருளில் இதைப் போன்ற படங்கள் அதிகம் வராதது வருத்தத்திற்கு உரிய விஷயமே.

இந்த புத்தகத்தில் மர்மங்களை நிறைய நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் மதன் தேர்ந்தெடுத்திருக்கும் விஷயங்கள் எல்லமே அநேகமாய் மேலை நாடுகளில் நடந்த சம்பவங்களே, இந்தியாவில் எந்த சம்பவத்தையுமே சொல்லவில்லை, அது கொஞ்சம் அதிருப்தியையும் ஆறுதலையும் ஒருங்கே எற்படுத்துகிறது. அதிருப்தி, இந்தியப் பேய்களை தெரிந்து கொள்ள முடியவில்லையே என்று, ஆறுதல் நல்ல வேளை நம்ம ஊரில் எதுவும் இல்லை என்று கொஞ்சம் பயம் இல்லாமல் வாசிக்க முடிகிறது. மொத்ததில் பல மர்மங்களை நமக்கு திரை விலக்கிக்காட்டும் இந்த புத்தகம் வாசிக்க அருமையான ஓன்று.

11 comments:

Unknown said...

Anbu thozhikku
Ungalin "manithanum marmangalum" pakuthiai paditheyn. Namaiyum ariyamal marmamana visayangal erupathai unara mudinthathu. Intha puthagam neriya marmangalai theylivu paduthum enpathai unartheyn. Mikka nandri. Ungalin Minnajal Ethayangal thodara valthukkal.

இனியாள் said...

இந்த பதிவில் உள்ள அனைத்து படங்களையும் தந்து உதவிய கலை, சரவணன் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Malar said...

Thozhiyae, ennaku paigalai patri neraiya therinthu kolla aavalaga ullathu. Veru thagaval therinthaal innum saerthu kollungal

இனியாள் said...

Nandri kalai, ungal varugaikum, anbukkum. Neegalum intha puththagathai padiththu innum niraiya vishayangalai therinthu kollungal.

Iniyal.

KARTHIK said...

நானும் இந்த புத்தகத்தை படித்திருக்கிறேன்.இதை வாசிக்கும் போது உண்மையிலேயே பேய் இருப்பதைபோன்று ஒரு தோற்றத்தை ஏற்ப்படுத்தவில்லையா.அதனால் அதை அவர் வேறு மாதிரியாக சொல்லிஇருக்கலாம்.ESP, UFO,மற்ற தகவல்கள் பற்றி கூறி இருப்பது ஏர்ப்புடையதே.
மதன் அவர்களின் வந்தார்கள் வென்றார்களும்,மனிதனுக்குள்ளே மிருகம்,இவைகளையும் வாசித்துப்பாருங்கள் .

இனியாள் said...

Nandri karthick ungal varugaiku.
Manithanum marmangalum naanum padiththu irukkiren. Thodarnthu varugai thaarungal.

திங்கள் சத்யா said...

உங்களுக்கு ஆவி உலகத்தில் நம்பிக்கை உண்டா? கூடு விட்டுக் கூடுபாயும் வித்தைகளை முயன்று பார்க்கலாமே!

இனியாள் said...

Sathya,

Ungalukku yean intha vibareetha aasai. Varugaiku nandri. Enakku bayam vanthal, aavigal illai endru nambi bayaththai pokki kolven :).

இனியாள் said...

Sathya,

Ungalukku yean intha vibareetha aasai. Varugaiku nandri. Enakku bayam vanthal, aavigal illai endru nambi bayaththai pokki kolven :).

Raghavan alias Saravanan M said...

அடடா அருமையான பதிவு இந்து!

மிகவும் அழகாக உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறீர்கள். மதன் ஒரு நல்ல அறிவாளி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனந்த விடகனில் வரும் அவருடைய 'ஹாய் மதன்' பகுதியே சான்று. நிச்சயம் இந்தப் புத்தகத்தைப் படிக்க முயலுகிறேன்.

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

லேகா said...

Nandru Iniyal:-) padikkum aavalai thoondukirathu ippathivu!!