skip to main |
skip to sidebar
Posted in
குறுங்கதை
Posted by
இனியாள்
on Monday, March 22, 2010
at
3:32 AM
கவின் சூர்யா நட்பின் கதையை சொல்லி விடும் முன் குழலியை(பூங்குழலி)
இங்கு அறிமுக படுத்துகிறேன். குழலி கவினின் இனிய ரசனைக்குரிய அன்பான தோழி.
பள்ளியில் ஒன்றாக படித்த போது மலர்ந்த அவர்களின் நட்பில் எப்போதுமே ஒரு அழகு இருந்தது. வெவ்வேறு கல்லூரிகளில் இருவரும் படிக்க போனபோது, அந்த நட்பு இன்னும் ஆழமானது. குழலியையும் கல்லூரியில் காதல் ஆட்கொண்டது, அந்த காதலால் சில நட்புகளும் அவளுக்கு அறிமுகம் ஆனது. விடுமுறைகளில் ஆற்றங்கரைகளில் அமர்ந்து கல்லூரி கதைகள் பேசும் போது குழலியின் பேச்சில் எப்போதாவது சூர்யாவும் இருப்பான்.
கவினும் சூர்யாவின் முதல் சந்திப்பே குழலி அக்காவின் திருமணத்தில் தான் நிகழ்ந்தது. அப்போது கவினுக்குள் சூர்யாவை பற்றிய பெரிய எண்ணங்கள் எதுவுமே இல்லை, அதே போல சுர்யாவும் தன் தோழியின் தோழி என்ற சின்ன அறிமுகத்தோடு பிரிந்து சென்றனர். கவினுக்கு குழலியின் காதலனை சந்திக்கும் ஆவலே அதிகம் இருந்தது அப்போது. கல்லூரி முடிந்த போதே, குழலியின் காதலும் முடிந்து போனது. அந்த காதலால் அவளுக்கு ஏற்பட்ட வலியை கவினும் சூர்யாவும் குறைக்க எண்ணினர் இந்த எண்ணங்களின் ஒற்றுமையே பின்னாளில் அவர்களை இணைத்தது.
குழலியை சென்னைக்கு அழைத்து வந்த கவின், விடுதியில் தங்கி வேலை தேடி கொண்டிருந்தாள். குழலிக்கு வந்த மறுநாளே வேலை கிடைத்திருந்தது, எனினும் குழலியின் சோகத்தை போக்க எண்ணி அவள் தோழர்களிடம் பேச சொல்லி ஊக்குவிப்பாள் கவின். சூர்யாவும் குழலியை மகிழ்விக்க எண்ணி அடிக்கடி அவளை அழைப்பதுண்டு, குழலியிடம் அலைபேசி இல்லை, கவினின் எண்ணிலேயே சூர்யா குழலியை அழைப்பான். இப்போது கவினின் மதிப்பில் சூர்யாவை பற்றிய எண்ணம் உயர்ந்திருந்தது. எனினும் கவின் சூர்யாவை வர்ணிக்கும் போது அவன் எந்த பெண்களிடமும் அதிகம் பேசி பழக விரும்பாதவன் என்றும் எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் முறைக்கிற மாதிரி இருக்கும் என்றும் தான் சொல்லி இருந்தாள்.
சூர்யாவின் அலைபேசி என்னை பார்த்ததுமே அலைபேசியை குழலியிடம் தந்துவிடும் கவின், ஒரு நாள் குழலி இல்லாத போது வந்த அழைப்பில் தான் முதலில் சூர்யாவுடன் பேசினாள். குழலி இருக்காங்களா என்று அதிகாரமாய் கேட்ட அந்த ஒற்றை வார்த்தையிலேயே சற்றே கவினுக்கு கோபம் ஏற்பட்டது, "இங்க யாரும் டெலிபோன் பூத் வச்சு நடத்தல, குழலி ஆபீஸ் போயிருக்கா" என சொன்ன உடன், திகைத்து போன சூர்யா, "சாரி எப்படி கேக்கணும்னு சொன்னீங்கன்னா அப்படியே கேட்டுருவேன்" என்று சொன்னான், இப்போது கவினுக்கு ஒரு புறம் திகைப்பும் மறுபுறம் தேவை இல்லாமல் பேசி விட்டோமோ என்ற சங்கடமும் வந்தது எனினும், "இல்ல போன் என்னோடதுனு தெரியும் கவின் எப்படி இருக்கீங்கனு ஒரு வார்த்தை கேக்கலாமே" என்று உளறி விட்டு வைத்து விட்டாள்.
கவினுக்கு மறுநாள் ஒரு அழைப்பு வந்தது தெரியாத எண்ணாய் இருக்கிறதே என்று யோசித்து கொண்டே எடுத்த பொது சூர்யாவின் குரல், "எப்படி இருக்கீங்க கவின்? ", திகைத்து விட்டாள் கவின். இந்நேரம் குழலி இருக்க மாட்டாளே எதற்காக இந்த அழைப்பு என்று அவள் சிந்திக்கும் போதே , நீங்க தானே நேத்து கேக்க சொன்னீங்க, அதான் போன் பண்ணி கேட்டேன் என்று சொன்ன சூர்யாவிடம் அன்றிலிருந்து பேசலாம் என்ற எண்ணம் தோன்றியது, எனினும் இவனுக்கு பெண்களை பிடிக்காது நாமே பேச தொடங்கினால் நம்மை தப்பாய் எடை போட்டு விடுவானோ என்ற எண்ணம் அவளுக்குள் இருந்தது.
இதை சூர்யாவே தகர்த்தான். அவளை சீண்டி விடவே பெண்களை கேலி செய்யும் குறுஞ்செய்திகளை அனுப்பி விடுவான், கவினுக்கு கோபம் எழும் உடனே பதில் அனுப்ப தொடங்கி அப்படியே பேச்சு நீளும். சூர்யாவுக்கே ஆச்சர்யமாய் இருந்தது தான் எதற்காக கவினிடம் பேச விரும்புகிறோம் என்ற கேள்வி அவனுக்குள்ளும் எழுந்து கொண்டு தான் இருந்தது. தினமும் அவள் அழைப்பிற்காக காத்திருப்பதும் அவனுக்கு சுகமான ஒரு அனுபவமாய் இருந்தது.இப்படி தொடங்கிய இந்த நட்பு இனிதே காதலில் முடிந்தது.
கவின்- சூர்யா இருவருக்கும் அப்பா இல்லாததால் இவர்களின் திருமணத்திலும் எந்த எதிர்ப்பும் இல்லை. இவர்கள் காதலுக்கு இவர்களே தான் எதிரிகள். இவர்களுக்கு காதலிக்க எவ்வளவோ நேரம் இருந்தது.என்னை கேட்டால் காதல் கதைகளில் அப்பா அம்மாவின் எதிர்ப்புகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட கால அளவு வரை தான். காதலர்கள் பிரிவதும் ஒன்று சேர்வதும் அவர்களின் பிரியங்களையும் புரிந்துகொள்வதிலுமே பொதிந்திருப்பதாய் தோன்றுகிறது. கவினுக்கும் சூர்யாவிற்கும் பரஸ்பர அன்பு நிறைய இருந்தது அவர்களுக்குள் நம் காதல் தோல்வி அடைந்து விடுமோ என்ற தடுமாற்றம் சிறிதும் இருக்கவில்லை. இவர்கள் காதல் வாழ்க்கையில் பல நகைச்சுவையான விஷயங்கள் நடந்ததுண்டு, அவை எல்லாம் மெல்ல சொல்லிகொள்ளலாமே....
9 comments:
//இவர்கள் காதல் வாழ்க்கையில் பல நகைச்சுவையான விஷயங்கள் நடந்ததுண்டு, அவை எல்லாம் மெல்ல சொல்லிகொள்ளலாமே....//
ரொம்ப டைம் எடுக்காதிங்க,சீக்கிரமே சொல்லிவிடுங்கள்
அப்புறம் கதை அருமையா போகுது,உண்மை கதையோ?
நல்லா எழுதறீங்க!
எனக்கும் கூட இந்த கதையை அதிகம் வளர்க்க விருப்பம் இல்லை மகாராஜன். வருகைக்கு நன்றி எப்போதாவது சில சுவாரஸ்யமான சம்பவங்களை எழுதுகிறேன்.
எல்லாருக்கும் இப்படியான அனுபவம் இருக்கும்/இருந்திருக்கும்.
வாழ்த்துகள்.
This story of happy Cinderella is like a mesmerizing melody. Well done!
Thanks viji.
நல்லா எழுதுங்க வாழ்த்துக்கள்....
Fantastic ,Kalakiteenga Indhu..
Fantastic,kalakiteenga Indhu...
Post a Comment