எட்டாம் திருநாள்


ஏப்ரல் மாதத்தை நினைத்தாலே மனது குதூகலத்தில் குதியாட்டம் போடும்.
ஊரில் இருந்து கிளம்பி வரும் சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா, அண்ணி, மதனி என்று வீடேநிறைந்திருக்கும் அற்புத நாட்களின் மாதம் அது. அவ்வளவு நாள் ஓடி கொண்டிருக்கும்தாமிரபரணி இவர்கள் எல்லா
ம் வந்த உடன் தான்மிகவும் அழகாய் தெரியும், மூட்டை துணியுடன்கூட வரும் பெ ரியவர்கள் துவைத்துமுடிக்கும்வரை எங்களுக்கு களியாட்டம் தான். செல்கள்எல்லாம் சிலிர்த்து குதுகலிக்கும் அந்தஆற்றங்கரை குளியல் தான் விடுமுறையின்சொர்க்க வாசல்.

சீட்டாட்டம், தாயக்கட்டம், காவேரி ஆட்டம்என்று களைகட்டும், அதிலும் காவேரி கட்டம்ஏப்ரலுக்கே எழுதி வைத்த வி
ளையாட்டு என்று நான் சின்ன வயதில் நினைத்ததுண்டு, ஏனெனில்அந்த விளையாட்டு தாயக்கட்டம் போலவே தான் இருக்கும் எனினும் கொடியை போல வரையபட்டிருக்கும் கட்டத்தில் இரு அணிகளாய் பிரிந்து கொடியின் நுனியை அடைவதே இலக்கு, அணிக்கு குறைந்தது 5 பேர் வீதம் விளையாடும் போது சுவாரஸ்யம் அதிகரிக்கும், காய்களைவெட்டுவதை நாங்கள் 'கொத்து' என்று அழைப்போம்,
இப்படி காய்களை கொத்திய பின் கொத்தாட்டை விளையாட வேண்டும் அப்படி விளையாடும்போது 12 விழுந்தால் 3 போட்டே ஆக வேண்டும் அப்படி 12 போட்டுவிட்டு 2 போட்டால்வெட்டியது செல்லாமல் போய் பழையஇடத்திற்கே போக நேரும், பெரியவர்கள்சிறியவர்கள் என்று இல்லாமல் எல்லோரும்தங்கள் அணிகளுகாய் 'வச்சதேங்காய்தொட்டதேங்காய், கொதிட்டா போதுமா, கொத்தாட்ட விளையாடு டே பாக்கலாம் , 12 -2 தான் விழும் ' இப்படி எல்லாம் சண்டை இட்டுவிளையாடும் போது பொழுது ரெக்கை கட்டிபறக்கும். அதிகம் பேசாத சித்தப்பா மாமாக்கள்கூட சில வேளை காவேரி கட்டத்தில் எதாவதுஒரு அணியில் இணைத்திருப்பார்கள் .

4 மணி ஆனதுமே மல்லி அரும்பு வாங்கி கட்ட தொடங்கும் மதனியும், பாட்டியும் எங்கள்கண்ணாமூச்சி ஆட்டத்தை ரசித்தபடி பூக்கட்டுவார்கள். சிறிய முற்றத்திலேயே ஒரு புறம்சைக்கிள்களும் ஒரு புறம் திண்ணைகளுமாய் இடித்து கொண்டாலும் விளையாட்டில் சுவைகூடுமே தவிர குறைந்ததில்லை. இரவானதும் நிலா சோறு என்று பாட்டி பெரிய குண்டா நிறையபிசைந்துகொண்டு வரும் தயிர் சாதத்தை துவையல், குழம்பு சகிதம் உருட்டி குடுக்க, வட்டமாய்அமர்ந்து உண்ணும் போது, தொண்டைக்குள் வழுக்கி கொண்டு ஓடும் அந்த நிலா சோறை விடஉலகிலேயே வேறு எதுவும் அவ்வளவு ருசியானதாய் இருந்ததில்லை.

பங்குனி திருவிழாவுக்கு கொடி ஏறினால் இன்னும் குதூகலம் தான், 10 நாள் நடக்கும் அந்ததிருவிழாவில் எட்டாம் நாள் எங்கள் ஊரில் சிறப்பாய் நடப்பதால் நாங்கள் எட்டாம் திருநாள்என்று சொல்வோம். திருவிழா நாட்களில் இரவில்மெல்லிசை, பட்டிமன்றம், கதாகாலசேபம் இப்படிஎவ்வளவோ சுவையான நிகழ்சிகள் நடக்கும். இந்ததிருவிழாவே சிவன் பார்வதியின் திருமணத்தை பார்க்கஎல்லா முனிவர்களும் கைலாயம் சென்றதால், தெற்கு பகுதிஆட்கள் இல்லாமல் உயர்ந்து விட்டதால் அதை சரி செய்யஅகத்திய முனிவரை அனுப்பி வைத்தாராம் சிவன்,
அப்போது அகத்தியமுனிவர் நான் தெற்கே சென்றால்என்னால் உங்கள் திருமணத்தை தரிசிக்க முடியாதேஎன்றுவருந்திய போது, கவலை கொள்ளாதே பத்துநாட்களில் உன்னை வந்து பார்த்து உனக்கு நாங்கள்இருவரும் மணக்கோலத்தில்காட்சி தருவோம் என்றுவாக்களித்தாராம், அப்படி கொடுத்த வாக்கை காப்பாற்றியசிவனும் பார்வதியும் வந்து
அகத்தியருக்கு காட்சி தருவதே இந்த திருவிழாவின் சிறப்பு. கிழக்கில் சிவன் கோயில் இருந்தது (எங்கள் வீட்டிற்குஅருகில் ), மேற்கில் அகத்தியர்கோயில் இருந்தது, கிழக்கில் இருந்து சிவனும் மேற்கில் இருந்துஅகத்தியரும் தேரில் அழைத்து வரபடுவார்கள், இவர்கள் மூவரும் சந்தித்து கொண்டு அருள்பாலிக்கும் அந்த தருணத்தை நாங்கள் காட்சி என்று அழைப்போம்.

எட்டாம் நாள் கும்பிடு நமஸ்காரம் வெகு பிரபலமாய் கொண்டாடப்படும், இந்த வைபவத்தின்போது கோயிலை சுற்றி நேர்த்தி கடன் செலுத்த திரளாய் மக்கள் உருண்டு வருவார்கள், உருண்டுவருவது ஒரு பக்தகூட்டம் எனில், அதை பார்க்க போவோரின் கூட்டமே அதிகமாய் இருக்கும். இப்படி வெயிலை பொருட்படுத்தாது இந்த கும்பிடு நமஸ்காரத்தை பார்க்க போகும்பக்தர்களுக்கு பானகரம், தண்ணீர் பந்தல், நீர் மோர் என்று கொடுத்து அவர்களின் தாகத்தைதீர்ப்பது ஒரு புண்ணியம். ஆதி அண்ணன் வீட்டில் எப்போதுமே பானகரம்
ந்தல் இருக்கும், எங்களுக்கெல்லாம் செம்பு செம்பாய் சாலாஅக்கா(ஆதி அண்ணனின் தங்கை) கொடுத்துவிடுவாள், அதை குடித்தபடி சுவாரஸ்யமாய்காவேரி கட்டம் தூள் பறக்கும், பெரியவர்கள்கூட்டஞ்சோறு செய்வதில் முனைத்திருப்பர். மாலையில் தேர் வரும் போது
பட்டு பாவாடை உடுத்தி, குஞ்சம் வைத்துதலைவாரி பூ முடித்து தயாராய் காட்சி பார்க்கபோன நாட்கள் எல்லாம் எதோ வேறு ஒருஜென்மத்தில் நிகழ்ந்த விஷயங்களாய்தோன்றுகிறது. இப்படி காட்சி பார்க்க வரும்இளம் பெண்களை பார்க்க வரும் இளைஞர் பட்டாளங்களுக்கும் குறைச்சல் இல்லை. இப்போதும் அதே திருவிழாக்களும் எப்ரில்களும் வந்து போகிறது, ஊருக்கு அழைக்கும்அம்மாவிடம் சாக்கு சொல்லி தவிர்க்கும் போது காதோரம் சலசலத்து கேலி செய்யும் என் ப்ரியநதி....

1 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in