ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும்....



மனம் மகிழ்ச்சியாகும் போது சட்டென்று உதடுகளில் எதாவது ஒரு பாடல் வந்து ஒட்டி கொள்ளும், அந்த பாடலின் இனிமையும் ஸ்வரங்களும் மனதில் நிறைந்து வழியும். ஆயிரம் கவிதைகள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை ஒரு பாடலால் ஏற்படுத்தி விட முடியும் என்றே தோன்றுகிறது.

எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து அதிகம் கேட்டு வந்தது இளையராஜாவின் பாடல்கள் தான். அதிலும் காதல் பாடல்களின் வரிகளை ஆழமாய் கேட்டு புரிந்துகொண்ட ரசிக்க தொடங்கிய போது உலகமே இன்ப மயமாய் தெரிந்தது. சிலோன் ரேடியோவில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு புது பாடல்களையும் இந்த பாடலுக்கான காட்சி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பதே சுவாரஸ்யமான பொழுதுபோக்காய் இருக்கும் எங்களுக்கு. அதிலும் இந்த பாடலை விரும்பி கேட்டிருப்பவர்கள் என்று நீளும் பெயர்கள் கூடுதல் மகிழ்வை ஏற்படுத்தும், என்றாவது நம் பெயர் நமக்கு பிடித்த பாடலின் முன் அறிவிக்க பட்டால் அன்றைக்கு கால் நிலத்தில் நிற்காது.

இளையராஜாவிற்கு முன்னும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் எத்தனையோ பாடல்கள் பனி இரவில் நிலவின் குளிர்ச்சியை தந்திருகின்றன.
காற்று மேலி இடை கண்ணம்மா, இரவும் நிலவும் தொடரட்டுமே, இந்த மன்றத்தில் ஓடி வரும், மாலை பொழுதின் மயக்கத்திலே இப்படி எவ்வளவோ இனிமையான கானங்கள் இருக்கின்றன சொல்லி செல்ல. வாஞ்சையான கரங்களும் மென்மையான அம்மாவின் சேலையும் தரும் சுகங்களை இந்த பாடல்கள் எனக்குள் ஏற்படுத்தும் இமைகள் எனை கேட்காமலே மூடி கொள்ளும்.

ராஜாவின் இசையில் ரசித்த பாடல்களும் அவற்றால் மனதில் விரியும் காட்சிகளையும் ஒன்று சேர்த்த ஒரு அற்புத கனவிலேயே வாழ்க்கை முடிந்திருக்க கூடாதா என தோன்றும். பூங்கதவே தாள் திறவாய்(நிழல்கள்) பாடலில் வரும் துவக்க இசை (இதை ஆங்கிலத்தில் prelude என்பார்கள்) அடர்ந்த அருவி கரையில் யாரோ நம்மை ஊஞ்சலில் அமர வைத்து ஆட்டி விடுவதை போல ஒரு சுகமான சிலிர்ப்பை ஏற்படுத்தும். நி ஒரு காதல் சங்கீதம்(நாயகன்) கேட்கும் போதே இப்போதே மணமான பெண்ணின் வெட்கமும் அந்த அழகான கடற்கரை மணலும் நினைவில் விரியும்.

ஒரு காதலனின் பரிவும் பாதுகாப்பான மடியின் கதகதப்பை நினைவுபடுத்தும் ஒ பாப்பா லாலி, காதலின் தயக்கத்தையும் அது மனதில் ஏற்படுத்தும் இன்ப அதிர்வையும் புலபடுத்தும் கொடியிலே மல்லியப்பூ, ராஜாவின் 'how to name it, nothing but wind' மழை நாளில் ஜன்னல் அருகே தேநீரோடு அமர்ந்து கேட்கும் போது உலகம் அப்படியே அந்த கணத்திலேயே உறைந்து போகட்டுமே என்று தோன்றும்.

லதா மங்கேஷ்கரின் மீரா பஜன் கேட்ட போது ஒரு குரலில் இவ்வளவு உருக்கம் இருக்க முடியுமா என்ற பிரமிப்பு ஏற்பட்டது, எம் எஸ் அவர்களின் குறை ஒன்றும் இல்லை, அன்னமாச்சார்யா கீர்த்தனைகளில் வழியும் பக்தியை கேட்டு பல நாட்கள் என் கண்கள் கலங்கி மெய் சிலிர்த்து போய் இருக்கிறேன். ரஹ்மானின் வந்தே மாதரத்தை கேட்டால் இது என் நாடு என்ற பெருமிதம் மனதில் வரும். இப்படி அற்புதமான இசைகளை கேட்கும் போதி மானத்தில் இனிமைகள் நிறைந்திருக்கும், இப்படி பட்ட இனிய மனைகளை இசை அழைத்து செல்லும் இடம் சொர்கத்தை தவிர வேறு எதுவாக இருக்கும்.

17 comments:

அண்ணாமலையான் said...

நிச்சயாமாக சொர்கம்தான்...

DREAMER said...

அருமையான பதிவு...

//ஒவ்வொரு புது பாடல்களையும் இந்த பாடலுக்கான காட்சி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பதே சுவாரஸ்யமான பொழுதுபோக்காய் இருக்கும்//

இந்த வரிகள் மிக அருமை... நானும் இப்படி பலமுறை யோசித்திருக்கிறேன்.

-
DREAMER

S Maharajan said...

உண்மை தான்

இனியாள் said...

Thanks for visiting annamalaiyan, dreamer and maharajan.

Anand R said...

400 plus runs in ODIs by India recently = உன் படைப்பு
200 (n.o) by Sachin = இளையராஜா-வைப் பற்றிய உன் விமர்சனம்...
Handy knocks by Karthik & Yusuf = மற்ற இசையமைப்பாளர்களுக்கும் நீ தந்த வெகுமதிகள்...
Blistering knock by Dhoni = உன் படைப்பை முடித்த விதம்...
Shewag's unwanted dismissal = படைப்பில் எழுத்துப் பிழைகள்...

இதைவிடவும் கூடுதல் விமர்சனம் வேண்டுமோ?

SANKAR SALVADY said...

மிக அருமையான பதிவு.. எனக்கு எப்போதுமே ஒரு கருத்து உண்டு .. ஆண்டவன் பல உருவங்களில் நம் முன் காட்சி தருகிறான்.. அதில் மிக முக்கியமானது இசை என்பது .. ராஜாவின் இசையை கேட்டு கொண்டு , நம்ம ஊர் மழை யை ஜன்னல் ஓரமாய் ரசிப்பது , ஆஹா.. எனக்கு மறுபடி வேண்டும் அந்த நாட்கள்..

உங்களை காதல் பாடல்கள் இழுத்ததை போல் என்னுடைய ஈர்ப்பு , இயற்கையை வர்ணிக்கும் பாடல்களும், ஊக்குவிக்கும் பாடல்களும், ஒரு தலை காதல் பாடல்களும் .. ( இது ஒரு பொன் மாலை பொழுது, கண்ணே கலைமானே, மடை திறந்து ) ..

என்னுடைய பூஜை அறையில் இறைவன் படங்கள் தவிர நான் வைக்க போதும் படங்களில் இளையராஜா கண்டிப்பாக இருப்பார்..

SANKAR SALVADY said...

Like the overhauling to your webpage ! Black background is very beautiful ! :)

இனியாள் said...

நன்றி ஆனந்த் இது ஒரு வித்யாசமான பாராட்டு, மிக்க நன்றி.

இனியாள் said...

நன்றி ஷங்கர்.

Parth said...

இந்துமதி, உங்கள் கனவுகள் & நிஜங்களின் சுவை இனிக்கிறது, தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள். உங்கள் வலை பூவை அறிமுகப்படுத்திய கந்தவேலனுக்கு நன்றி. உங்கள் கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் நன்றி - பார்த்தசாரதி

Parth said...

இந்துமதி, உங்கள் கனவுகள் & நிஜங்களின் சுவை இனிக்கிறது, தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள். உங்கள் வலை பூவை அறிமுகப்படுத்திய கந்தவேலனுக்கு நன்றி. உங்கள் கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் நன்றி - பார்த்தசாரதி

settaikkaran said...

இளையராஜா இசையில், பாடகர், பாடகி என்று தனித்தனியே பிரித்து குறுந்தகடுகள் சேகரிப்பதே எனது நீண்டநாள் வழக்கம். "பச்சமலைப்பூவு" பாட்டைக் கேட்டால் நின்று கொண்டே தூங்கிவிடத்தோன்றும்.

இமலாதித்தன் said...

//எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து அதிகம் கேட்டு வந்தது இளையராஜாவின் பாடல்கள் தான். அதிலும் காதல் பாடல்களின் வரிகளை ஆழமாய் கேட்டு புரிந்துகொண்ட ரசிக்க தொடங்கிய போது உலகமே இன்ப மயமாய் தெரிந்தது.//

அட.... அப்படியே, என் எண்ணங்களை ஒத்துப்போகிறதே.


//சிலோன் ரேடியோவில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு புது பாடல்களையும் இந்த பாடலுக்கான காட்சி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பதே சுவாரஸ்யமான பொழுதுபோக்காய் இருக்கும் எங்களுக்கு//.

இப்போ வரைக்கும் எங்க வீட்டுக்கு போனால் இந்த அனுபவம் தான்,நாகப்பட்டினம் என்பதால் இலங்கை வானொலி பண்பலைகள் அனைத்தும் தெள்ளத்தெளிவாய் கேட்கும்.ஹோம் தேட்டர்ல கனக்ட் பண்ணி சக்தி.சூரியன் பண்பலை கேட்பதே அலாதி ப்ரியம் தான்.புது பாடல்களை கேட்டுவிட்டு கற்பனை பண்ணி பொழுது ஓட்டுவதே நல்ல இனிமையான அனுபவம்.எனக்கு தெரிந்து 'மின்னலே' படத்தின் 'வசீகரா' பாடலை கேட்டுவிட்டு கற்பனை செய்ததது ஒன்று.ஆனால் பாடல் காட்சியமைப்போ வேறு விதமாய் இருந்தது.


//பூங்கதவே தாள் திறவாய்(நிழல்கள்) பாடலில் வரும் துவக்க இசை (இதை ஆங்கிலத்தில் prelude என்பார்கள்) அடர்ந்த அருவி கரையில் யாரோ நம்மை ஊஞ்சலில் அமர வைத்து ஆட்டி விடுவதை போல ஒரு சுகமான சிலிர்ப்பை ஏற்படுத்தும்.//

எனக்கும் அந்த பாட்டின் ஆரம்ப இசை மனதை நெகிழ வைப்பது போல இருக்கும்.



//நி ஒரு காதல் சங்கீதம்(நாயகன்) கேட்கும் போதே இப்போதே மணமான பெண்ணின் வெட்கமும் அந்த அழகான கடற்க//ரை மணலும் நினைவில் விரியும்.

நெஞ்சை தொடும் பாடல்.அப்படியே உண்மை..ரொம்ப அனுபவபட்டு எழுதிய இசையை பற்றிய கட்டுரை.என் மனதை மிகவும் நெருங்கிய் கட்டுரை இது.

இது போன்ற ஒரு இசைப்பதிவுக்கு நன்றி

வில்லனின் விநோதங்கள் said...

நீங்கள் சுட்டு
இட்டாலும் மனதை
தொட்ட பதிவு -
சடையன் சாபு முத்தமிழ், பண்புடன் குழுமத்தில் இருந்து
-------------------------------------
நல்ல கட்டுரை

வாணி சங்கீத மேகம் குழுமத்தில் இருந்து
-----------------------------------
நானும் ரசித்த பாடல்கள்
மலரும் நினைவுகள்
தனிமையில் தாலாட்டி மகிழ்விப்பதும் இசையே
இளமையில் இன்பமென்றால் முதுமையில் இதம்
போட்டோக்கள் எல்லாமே அழகு
சீதாம்மா முத்தமிழ் குழுமத்தில் இருந்து
----------------------------------
அதில் இருந்த பாடல்கள் அத்தனையும் மனதில் ஏற்படுத்திய உணர்வுகளையும் சுகங்களையும் அப்படியே படம்பிடித்ததைபோல் எழுதியிருந்தது...

ஆஹா அற்புதமான பதிவு... இங்கு இதைபதிந்ததற்கு மிக்க நன்றி ஸ்ரீ...... ஒரு சின்ன திருத்தம்... ஒரு இனிய இசை மனதை அழைத்து செல்லும்.....
கவிஞா காயத்திரி பண்புடனில் இருந்து
----------------------------------
அருமையான பதிவு! விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா தவிரவும் ஏ.எம்.ராஜா .கே.வி.மகாதேவன், வி.குமார், விஜய பாஸ்கர் என்று காதுக்கினிய பாடல்களைத் தந்த இசையமைப்பாளர்களுக்குப் பஞ்சமே இல்லை.

தமிழன் வேணு தமிழ்தென்றல் குழுமத்தில் இருந்து
----------------------------------
இந்தக் கட்டுரை என் உள்ளத்தை அப்படியே படம் பிடித்தது போலிருந்தது. அதாவது நான் எழுத மறந்தது. இல்லையென்றால் இப்படி வைத்துக் கொள்ளுங்கள். சிலம்பாட்டம் படத்தில் கர்ணாஸ் சொல்ல நினைத்ததை மற்றவர்கள் உடனே சொல்வார்களே அதைப் போலிருந்தது.

இனிய இசையால் என் மனதை அழைத்துச் சென்று விட்டீர்கள்.

வாழ்த்துக்கள்.
சாதீக் அலி தமிழ் நண்பர்கள் குழுமத்தில் இருந்து
-----------------------------------
எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து அதிகம் கேட்டு வந்தது இளையராஜாவின் பாடல்கள் தான். அதிலும் காதல் பாடல்களின் வரிகளை ஆழமாய் கேட்டு புரிந்துகொண்ட ரசிக்க தொடங்கிய போது உலகமே இன்ப மயமாய் தெரிந்தது.
அட.... அப்படியே, என் எண்ணங்களை ஒத்துப்போகிறதே.

சிலோன் ரேடியோவில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு புது பாடல்களையும் இந்த பாடலுக்கான காட்சி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பதே சுவாரஸ்யமான பொழுதுபோக்காய் இருக்கும் எங்களுக்கு.
இப்போ வரைக்கும் எங்க வீட்டுக்கு போனால் இந்த அனுபவம் தான்,நாகப்பட்டினம் என்பதால் இலங்கை வானொலி பண்பலைகள் அனைத்தும் தெள்ளத்தெளிவாய் கேட்கும்.ஹோம் தேட்டர்ல கனக்ட் பண்ணி சக்தி.சூரியன் பண்பலை கேட்பதே அலாதி ப்ரியம் தான்.புது பாடல்களை கேட்டுவிட்டு கற்பனை பண்ணி பொழுது ஓட்டுவதே நல்ல இனிமையான அனுபவம்.எனக்கு தெரிந்து 'மின்னலே' படத்தின் 'வசீகரா' பாடலை கேட்டுவிட்டு கற்பனை செய்ததது ஒன்று.ஆனால் பாடல் காட்சியமைப்போ வேறு விதமாய் இருந்தது.

பூங்கதவே தாள் திறவாய்(நிழல்கள்) பாடலில் வரும் துவக்க இசை (இதை ஆங்கிலத்தில் prelude என்பார்கள்) அடர்ந்த அருவி கரையில் யாரோ நம்மை ஊஞ்சலில் அமர வைத்து ஆட்டி விடுவதை போல ஒரு சுகமான சிலிர்ப்பை ஏற்படுத்தும்.
எனக்கும் அந்த பாட்டின் ஆரம்ப இசை மனதை நெகிழ வைப்பது போல இருக்கும்.


நி ஒரு காதல் சங்கீதம்(நாயகன்) கேட்கும் போதே இப்போதே மணமான பெண்ணின் வெட்கமும் அந்த அழகான கடற்கரை மணலும் நினைவில் விரியும்.
நெஞ்சை தொடும் பாடல்.அப்படியே உண்மை..ரொம்ப அனுபவபட்டு எழுதிய இசையை பற்றிய கட்டுரை.என் மனதை மிகவும் நெருங்கிய் கட்டுரை இது.
இமலாதித்தன் தமிழ் நண்பர்களில் இருந்து
----------------------------------
உள்ளதை உள்ளபடி எந்தவித ஆரவாரப்பூச்சும் இல்லாமல் சொல்லப்பட்ட இனிமையான இசைக்கட்டுரைகளில் இதுவும் ஒன்று. நன்றி.
டாக்டர் சங்கர் குமார் முத்தமிழ் குழுமத்தில் இருந்து
---------------------------------
கர்னாடாக இசையின் மெட்டமைப்பில் இயற்றிய பாட்டுக்கள் அனைத்தும்
காலம் காலமாக இன்னும் மறக்கப்படவில்லை.
அன்புடன் ராகவன்.வ தமிழ் தென்றல் குழுமத்தில் இருந்து.

வில்லனின் விநோதங்கள் said...

நான் உங்க பதிவை (உங்க பேரும், ப்ளாக் முகவரியும் கொடுத்துதான்) சில கூகிள் குழுமங்களில் போட்டிருந்தேன், அதுக்கு கிடைத்த பின்னூட்டங்கள்தான் அவை,

இனியாள் said...

மிக்க நன்றி இமலாதித்தன், நல்ல இனிமையான தமிழ் பெயர், உங்கள் கருத்துக்கள் என்னை உற்சாக படுத்துகிறது. இசை சார்ந்த ஒரு நல்ல பதிவுகளை எழுத முயல்கிறேன்.

இனியாள் said...

வில்லன் நீங்க என்னை ரொம்ப உற்சாக படுத்தி இருக்கீங்க, மிக்க நன்றி. உங்க பேர் வில்லனா இருந்தாலும் நீங்க நல்லவரா இருப்பீங்க போல. ரொம்ப மகிழ்ச்சி.