
ஜீவா, பக்கடா, குட்டிமணி ஊரிலும் பள்ளியிலும் பல குறும்புகள் செய்து திரியும் வா


பிரேம்குமாரின் ஒளிப்பதிவில் மழையும், குளங்களும், கிராமத்து பள்ளிக்கூடமும் பசுமையாகவும் அழகாகவும் காட்டப்பட்டு இருக்கின்றன. ஜேம்ஸ் வசந்தன் இசையில் பின்னணி இசையும் இரண்டு பாடல்களும் அருமையாய் நம்மை வருடி குடுக்கிறது. முக்கியமாக அன்புவின் அம்மாவும் அப்பாவும் குழந்தைகளுக்காக தங்கள் சண்டைகளை விட்டு சமாதானம் ஆகும் இடத்தில பின்னணி இசை மட்டுமே பிரத்யேகமாக நம்மை ஆக்ரமிக்கிறது. மேலும் நம் நியாபக அடுக்குகளில் ஒளிந்திருந்த இளையராஜாவின் பல அரிய இசை துணுக்குகள் ரிங் டோன்களாக வலம் வருவது மனசுக்கு மகிழ்வை தருகிறது, இதற்காகவும் நாம் ஜேம்ஸ் வசந்தனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

சிறப்பு அம்சங்கள் என்று பார்த்தால், குழந்தைகளின் எதிரில் சண்டை போடும் பெற்றோரால் பாதிக்க படும் குழந்தைகளின் மனநிலை, அப்துல் கலாமின் கனவு காணுங்கள் தத்துவம், சகோதர பாசம்(அன்புவிற்கும் அவன் தங்கை தெய்வக்கனிக்கும் இடையில் உள்ள நெருக்கம்), பெற்றோரிடம் குழந்தைகள் எதிர்பார்க்கும் அக்கறைகள் இப்படி பல விஷயங்களை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
படத்தில் சிறப்பம்சமாக நான் கருதும் விஷயங்கள், நல்ல தமிழ் பெயர்களை (தெய்வக்கனி, அன்புகரசு, மனோன்மணி) படத்தில் கேட்க நேர்ந்தது. சினிமாவில் இதுவரை நாம் கேட்டிராத சில வார்த்தைகள், "நல்ல மணத்து கெடக்கு, அடி ஏக்கதவளே, யோசனை மன்சிவாண்டு தான், நிரம்ப" இப்படி இதெல்லாம் கேட்கும் போது ஒரு லகு தன்மை ஏற்படுகிறது. இந்த படத்தை பார்க்கும் யாருமே தன்னுடைய பள்ளி நாட்களை நினைத்துக்கொள்ள எதோ ஒரு பகுதி உதவும் என்றே தோன்றுகிறது. மனோன்மணி, புஜ்ஜிமா, அப்பத்தா, சொக்கன் வாத்தியார், தெய்வக்கனி, அன்புவின் அப்பா, அம்மாவாக வருவோர் இவர்கள் அனைவருமே இயல்பான நடிப்பில் மனதை கவர்கிறார்கள். என்னை திரும்ப திரும்ப அலுப்பில்லாமல் பார்க்க தூண்டும் படமாக இந்த படம் இருந்தது, தமிழ் சினிமாவில் சொல்லி கொள்ளும் அளவிற்கு எடுக்க பட்ட குழந்தைகள் படமாக இதை கருதுகிறேன், குழந்தைகள் படமாக இருப்பினும் இதில் பெரியவர்கள் கற்று கொள்ள நிறைய இருக்கிறது
2 comments:
adutha post eppo poduveenga madam.,thinamum unga valai poova paarthu yemaatram dhan minjudhu.,
நம் ஊரைப் பற்றி கொஞ்சம், சின்ன வயசு சம்பவங்கள் கொஞ்சம் எழுதுங்களேன்
உங்களது படைப்பை எதிர்பார்க்கும்
சகோதரன்
முத்து செல்வன்
Post a Comment