அம்மியிலே இலை பரப்பி
பாக்கு வைத்து நீ அரைக்கும் போது
உன் விரல் நுனியின் சிவப்பினிலே
என் இமைகதவு சிறகடிக்கும்
குப்பி குப்பயாய் விரல் மறைத்து
வைத்து விடுவாய் மருதாணியை
உள்ளங்கையில் நட்சத்திரம் கேட்பேன் நான்
நிலா தான் அழகென்று வைப்பாய் நீ
ரெண்டு கையிலும் வைத்ததும் தான்
தாகம் எடுக்கும், மூக்கு அரிக்கும்
என் கை சிவப்பதற்கு முன்
உன் கண் சிவந்து போகும்
காலையில் அப்பாவிடம் கேட்போம்
யார் கை அழகாய் இருக்கிறதென்று
என் கை தான் என்று அப்பா சொல்வார்
இப்படி சிவக்க எதை கலந்தாய் மருதாணியில்,
துளி பாக்கும், மஞ்சளும் நிறைய பாசமும் இருக்கலாம்.
பாக்கு வைத்து நீ அரைக்கும் போது
உன் விரல் நுனியின் சிவப்பினிலே
என் இமைகதவு சிறகடிக்கும்
குப்பி குப்பயாய் விரல் மறைத்து
வைத்து விடுவாய் மருதாணியை
உள்ளங்கையில் நட்சத்திரம் கேட்பேன் நான்
நிலா தான் அழகென்று வைப்பாய் நீ
ரெண்டு கையிலும் வைத்ததும் தான்
தாகம் எடுக்கும், மூக்கு அரிக்கும்
என் கை சிவப்பதற்கு முன்
உன் கண் சிவந்து போகும்
காலையில் அப்பாவிடம் கேட்போம்
யார் கை அழகாய் இருக்கிறதென்று
என் கை தான் என்று அப்பா சொல்வார்
இப்படி சிவக்க எதை கலந்தாய் மருதாணியில்,
துளி பாக்கும், மஞ்சளும் நிறைய பாசமும் இருக்கலாம்.
6 comments:
cone maruthani padathai vida pachilllai araiththa maruthaniyai kailyil ita padangal innum poruthamai irukkume....
Kalakreenga indu, very touching
Thanks malar, ennoda id la irunthe anupiteenga..... Nandri.
Nandri thendral, appadi ethachum pada kidaichcha anupungalen..... potralam.
அருமையான பதிவு...ஆயிரம்தான் கோன் மருதாணி வந்தாலும் அம்மா கையாலயே அம்மியில் அரைத்து வைக்கப்பட்ட மருதாணிக்கு ஈடாகுமா.. ? வாழ்க மலரும் நினைவுகள்
கப்பியாம்புலியூரன்
Nandri kandavelan, varugaikum ungal thodarntha aatharavirkum.
Post a Comment