பிரிவும் பிரிவின் நிமித்தமும்.......


உன் ஆற்றாமைக்கும்
என் இயலாமைக்கும் இடையே
ஓடிக்கொண்டிருக்கிறது நம் பிரிவு
ஓயாமல் பேசி சிரித்த உதடுகளில்
இப்பொழுது வார்த்தைகளற்ற மெளனங்கள்
தூசி படிந்த இருச்சக்கர வாகனம்
தேய்க்க படாத சந்தன சோப்பு
சுவைக்க ஆளில்லாமல் வீணாகும் இனிப்புகள் இவைகளுடன்
உன் விரல் பற்றி உலகம் சுற்ற மகனும்
தன் பிஞ்சு கால்களால் உன் மார்புதைக்க மகளும்
உன் செல்லக் குறும்புகளை ரசிக்க நானும்
விழிகளில் நேசப்பூக்களுடன் காத்திருப்போம்நீ இல்லாத வாழ்க்கை
எனக்கு இருட்டானது தான்
அதை நிரூபிக்க
மழையும் புயலும்
அதனால் போன மின்சாரமும் தேவையில்லை
0 comments: