காதலால் விழுந்தேன் என்ற பதிவின் தொடர்ச்சியான இந்த பதிவில் எப்படி பட்ட ஒரு திகிலான சுழலில் நான் சிக்க நேர்ந்தது என்பதை விவரிக்க எண்ணுகிறேன். நான் அந்த மருத்துவரிட

பயத்தில் எனக்கு அழுகை வரும் போல இருந்தது எனினும் அதற்கெல்லாம் நேரம் இல்லாததால் அவருடன் ஓட தொடங்கினேன், நாங்கள் இருவரும் முள் காடு, வயல் வெளிகள் என்று ஒவ்வொரு இடமாய் ஓடி கொண்டிருந்தோம், சுமார் மூன்று மணி நேரம் ஓட்டம், தூரத்தில் அந்த சுமோ துரத்தி கொண்டே வந்தது எனக்கு பயம் ,எரிச்சல், கோவம் என்று கலவையான உணர்வுகள். 'நீங்கள் காதலித்தால் நீங்கள் இருவரும் செத்து தொலைக்கலாமே அநியாயமாய் என்னையும் இதில் எதற்காய் இழுக்க வேண்டும் என்று, இப்படி ஒரு காதல் உங்களுக்கு தேவையா என்றெல்லாம் திட்டி கொண்டே ஓடினேன்(அப்போதும் என்னுடைய ஒரு கொயர் நோட்டையும் என் பர்சையும் விடவில்லை). தண்ணீர் குடிக்க ஒரு வீட்டில் ஒதுங்கிய போது அவர்கள் நாங்கள் இருவரும் காதலர்கள் என்று நினைத்து விட்டார்கள் எனக்கு எரிச்சல் தாளவில்லை. இதற்குள் நாங்கள் திருநெல்வேலியை விட்டு 5, 6 கிலோமீட்டர்கள் தள்ளி ஓடி வந்து விட்டோம். எனக்கு திடீர் என்று என்னுடன் ஓடி வந்து கொண்டிருந்த மருத்துவரின் பேரிலேயே சந்தேகம் வந்தது ஒரு வேளை இதெல்லாம் என்னை கடத்துவதற்கான சதியோ என்று ஆனால் அதற்கான காரணங்கள்

மாலையானால் என்னை என் சித்தப்பா வந்து அழைத்து போக வருவதை கூறி இருந்தார்கள் எனக்கு அது வேறு பயம் எப்படி இவர்களிடம் இருந்து தப்பி அங்கே போவது என்று. ஒரு இடத்தில ஒளிந்து அமர்ந்திருந்த போது விடமால் ஷஷ்டி கவசம் சொல்லி இறைவா எப்படியாவது எங்களை காபற்றிவிடு என்று வேண்டினேன், இதற்குள் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் அவங்க அங்க தான் இருகாங்க என்று கத்தினான் உடனே எனக்குள் ஒரு அதித சக்தி புகுந்தது போல வேகமாய் நான் அந்த மருத்துவர் என்னை பற்றி இருந்த கையை உதறி விட்டு தூரத்தில் தெரிந்த நெடுஞ்சாலையை நோக்கி ஓடினேன், சிஸ்டர் சிஸ்டர் வேண்டாம் அவர்கள் வருகிறார்கள் என்று சொன்னபடியே அவரும் என் பின்னால் வந்தார் நான் வேகமாய் ஓடி அந்த நெடுஞ்சாலையில் வந்த ஒரு பேருந்தை நிறுத்தினேன். உடனே அதுவும் நின்றது, அதில் ஏறி அமர்ந்தேன் சுதாகரும் என்னுடன் ஏறி வந்து என்ன சிஸ்டர் இப்படி செஞ்சிடீங்க பின்னால பாருங்க சுமோ வந்திட்டு இருக்கு என்று சொன்னார், நான் உடனே தயவு செஞ்சு என்னை விட்டு விடுங்கள் நான் போய் கொள்கிறேன் நீங்கள் உங்களை காப்பற்றி கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு பேருந்து எங்கே போகிறது என்று கேட்டேன். அப்போது தான் பேருந்து தாழயுத்து என்ற இடத்திற்கு செல்வது தெரிந்தது அங்கே போய் இறங்கி வேறு ஒரு பேருந்தில் தான் மறுபடி திருநெல்வேலி வரவேண்டும், எனினும் நான் பயணசீட்டு வாங்கி விட்டேன், மூன்று நிறுத்தங்கள் வரும் என்று சொன்னார்கள். எனக்கு பயமாய் இருந்தது பின்னால் வரும் சுமோவை நினைத்தும் அந்த மருத்துவரின் நிலைமை குறித்தும், நான் தப்பி விடுவேன் என்ற எண்ணம் எனக்கு ஏனோ வந்து விட்டிருந்தது.
அடுத்த நிறுத்தம் வந்த உடன் அங்கே நிறுத்தத்தில் நின்ற பெண் ஒருத்தி மருத்துவரை பார்த்து இவன் தான் இங்கே தான் நிற்கிறான் என்று கூவினாள் உடனே இவர் பேருந்தில் இருந்து இறங்கி தெருவுக்குள் வேகமாய் ஓட ஆரம்பித்தார் அத்துட

அந்த மருத்துவருக்கு அந்த பெண்ணுடனே கல்யாணம் நடந்திருக்குமா அவர்களுக்கு குழந்தைகள் இருக்குமா, அலல்து அவர் உயிருடன் இருக்கிறாரா.
அவ்வளவு நேரம் ஓடிய போது அவரிடம் கேட்ட தகவல் படி அவரின் காதலி வெகு அழகாய் இருப்பாளாம் அவளை ஒரு முறை கூட பார்க்க முடியாமல் போனோமே, அந்த காதல் என்னவாகி இருக்கும், இவர்களை எதிர்க்கும் இந்த ஜாதி மதம் பார்க்கும் சமுதாயம் எப்போது திருந்தும் என்றெல்லாம் எண்ணியபடி இருப்பேன் எனினும் எனக்கு ஆபத்து வந்த போது நானும் அந்த காதலை எதிர்க்க தானே செய்தேன் என்ற குற்ற உணர்வுடன், உடனே நானே தனக்கு மிஞ்சி தானே தானமும் தர்மமும் என்றும் சொல்லிகொள்வேன்.
1 comments:
'scribbles on akka' வில் எழுதிய உங்கள் பின்னுட்டத்தை இப்பொழுதுதான் பார்த்தேன்.
நேரமின்மையாலும் சோம்பலினாலும் மட்டுமே நான் பதிவுகள் இடுவது இல்லை. மற்றபடி மனதினுள் எழுத்து எப்பொழுதும் ஓடி கொண்டேதான் இருக்கிறது. உங்கள் பதிவுகளை இப்பொழுதுதான் படிக்க துவங்கி உள்ளேன். நிறைய எழுத வேண்டும் என ஆர்வம் தூண்டும் பதிவுகள். நன்றி!
Post a Comment